இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய தொழுகை ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் சார்ந்தது அல்ல! நாம் ஒவ்வொரு நாளும் இயேசுவின் சீஷர்களாகவும் ஊழியர்களாகவும் அன்புடன் நம்மை அர்ப்பணித்து, தேவனை அவருடைய பரிசுத்த மற்றும் அன்பான பிள்ளையாக அராதிக்கிறோம் . நாம் ஞானமுள்ளவர்களாக தீமையை எதிர்த்து, நன்மையை தேர்ந்தெடுக்கும் போதெல்லாம், தேவனுக்குப் பிரியமான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க தொழுகையை செய்கிறோம். ஒரு சபை கூடும் கட்டிடத்தில் நாம் செய்யும் தொழுகை மாத்திரம் முதன்மையாக இல்லை என்பது ஒரு உற்சாகமான காரியமாக இல்லையா?! நாம் தினசரி தேவனை துதிப்பதற்கு நமது முடிவுகளும் செயல்களும் முக்கியமானவை என்பது ஆச்சரியமான காரியம் அல்லவா?! நம் சரீரத்தால் நாம் என்ன செய்கிறோம், நம் மனதினால் என்ன நினைக்கிறோம், நம் இருதயத்திலிருந்து தேவனுக்கு எப்படிக் கீழ்ப்படிகிறோம் என்பதை வழங்குவது இன்றியமையாத ஆவிக்குரிய தொழுகையாகும்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்த ஆண்டவரும் சர்வவல்லமையுள்ள தேவனே , இன்றும், வரும் ஒவ்வொரு நாளும் எங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் யாவற்றையும் நீர் காணிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள். உமது இரக்கத்தையும் கிருபையையும் எங்கள் மீது பெருக நீர் செய்த அனைத்திற்காகவும் எங்களின் அன்பான ஆராதனையாகவும் நாங்கள் உமக்கு அர்ப்பணித்துள்ளோம் என்பதை எங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் எங்கள் சரீரத்தையும், எங்கள் இருதயங்களையும், எங்கள் மனதையும், எங்கள் வார்த்தைகளையும் உமக்கு முழுவதுமாக அர்ப்பணித்து, இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து