இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
வெகு சீக்கிரத்தில் , நாம் முடிவு செய்ய வேண்டும்: நான் ஒத்த வேஷந்தரியாமல் இருப்பேனா? நான் இந்த உலகத்துடன் ஒத்த வேஷந்தரியாமல் இருப்பதை மறுப்பேனா? நான் ஒரு கிறிஸ்தவ கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பேனா? நான் தேவனின் நபராக, அந்நியனாகவும், உலகத்திலிருந்து பிரிதெடுக்கப்பட்டவனாகவும், இயேசுவைப் பின்பற்றுபவராகவும், மீட்பின் நம்பிக்கையை பகிர்ந்துந்துகொள்பவனாய் இருப்பேனா? இயேசு நம்மை அவருடைய சீஷர்கள் என்று அழைக்கிறார். எனவே, அடிப்படை வரி: கலாச்சார இணக்கத்தின் எல்லையைத் தாண்டி, கர்த்தராகிய இயேசுவுக்காக முழுமையாக வாழ நாம் தயாராகும் வரை, தேவனின் விருப்பம் என்ன என்பதை நாம் முழுமையாக அங்கீகரிக்கப் போவதில்லை. பெயர் அளவுக்கு கிறிஸ்தவர்கள் இல்லை. பகுதி நேர சீஷர்கள் இல்லை. வாகனத்தில் பின்புறத்தில் அமர்ந்து செல்லும் என்ற ஒரு கிறிஸ்தவர்கள் இல்லை. நாம் ஒன்று இயேசுவின் வார்த்தைகளுக்கு முற்றிலுமாய் கீழப்படிந்து இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் இருப்போம் அல்லது அதை நிராகரிக்கிறோம். எனவே உங்கள் முடிவு என்ன? இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் இருப்போம், இயேசுவுக்காக வாழ்வோம்.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள தேவனே, இயேசு கிறிஸ்து கர்த்தரும் இரட்சகரும் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு மனிதனாக இந்த பூமிக்கு வந்தார், கிருபை மற்றும் வல்லமையுடன் ஒரு முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து, என் பாவங்களுக்காக மரித்தார், அதனால் நான் உமக்காகவும் உம்முடனும் என்றென்றும் வாழ முடியும் என்று நான் நம்புகிறேன். தேவனே , உமக்கான எனது உறுதிப்பாட்டின் மீது நான் மறைந்திருந்து இருளுடன் உல்லாசமாக இருந்த நேரங்களுக்காக என்னை மன்னியுங்கள். நான் உமக்காக உத்வேகத்தோடும், மகிழ்ச்சியோடும், நிறைவோடும் வாழ விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து என்னை கிறிஸ்துவைப் போல மாற்றி, உலகத்திற்கு ஒத்துப்போகாமல் வாழ நான் என்னை உமக்கு முழுவதுமாக அர்ப்பணிக்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.