இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனானவர் பேசும் தேவனாய் இருக்கிறார் . அவர் நம்மை நேசிக்கிறார், அவருடைய செய்தியை வார்த்தைகளில் மூலமாய் நமக்கு அறிவிக்க தேர்ந்தெடுத்தார். முதலில் முற்பிதாக்களும் பெரிய தீர்க்கதரிசிகளும் இருந்தனர். பின்னர் வேதாகமத்தில் எழுதப்பட்ட பதிவு இருந்தது. ஆனால் தேவனின் மிகப் பெரிய செய்தி என்னவென்றால் , அவருடைய மிக வல்லமை வாய்ந்த வார்த்தைகள் உண்மையில் வெறும் வார்த்தைகள் அல்ல, அந்த வார்த்தை மாம்சமானார்,அவரே நாசரேத்தின் இயேசுவானவர் , அவர் கிறிஸ்துவும் அனைவருக்கும் ஆண்டவருமாக இருக்கிறார். அவருடைய திருச்சபையாகிய நமக்காக, அவர் விரும்புகிறபடி இருக்க, நாம் வேதத்தை மட்டும் நோக்கி பார்க்காமல், அவரையும் உற்று பார்க்க வேண்டும். பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகிறது , என்பதைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் இயேசுவே, அதை கடைபிடித்து வாழவேண்டும் என்பதையும் அவர் மூலமாகவே அறிந்துக்கொள்ள முடியும்.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள பிதாவே, நான் உம்முடைய வார்த்தையாகிய வேதாகமத்தை திறந்து, உமது சித்தத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது, இயேசுவையும் அவருடைய கிரியைகளையும், நோக்கத்தையும் இன்னும் தெளிவாகப் பார்க்க எனக்கு உதவுங்கள். "இயேசு என்ன செய்திருப்பார்?" என்ற சிந்தனையோடே ஒவ்வொரு பதிலுக்கு மிக தெளிவான முடிவையும் நான் எடுக்கத்தக்கதாக , உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பவும். என் ஆண்டவரும் இரட்சகருமான இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.