இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பகலில் இடைவெளியில் மீண்டும் மீண்டும் உணவுக்கு ஆசைப்படுகிறோம். இந்த விடுமுறை நாட்களில் உணவு நம் எண்ணங்ள் முழுவதுமாக நிறைந்து , நமது செயல்பாடுகளை அவைகளே நிரப்புகின்றன . ஆனால் நம் உள்ளத்தின் ஆழத்தில் ஆத்தும தாகம் இருக்கிறது , ஆத்துமாவுக்கான தாகம் . இந்த ஆத்தும தாகத்தை உணவு, பானங்கள் அல்லது இரசாயனங்கள் மூலம் நிரப்ப முடியாது. இந்த தாகம் நம் சிருஷ்டிகரால் நமக்குள் உண்டாக்கப்பட்ட அவருடைய சித்தமாய் இருக்கிறது , அவர் நம் தாயின் வயிற்றில் நம்மை உருவாக்கும் பொழுது அங்கே வைத்தார் (சங்கீதம் 139:13-16). இந்த தாகத்தை இயேசுவால் மாத்திரமே தீர்க்க முடியும்.

என்னுடைய ஜெபம்

என் பிதாவே , என்னை இயேசுவினால் நிரப்பியருளும் . என் அனுதின அப்பத்தை இன்றே எனக்குத் தாரும் , நான் வாழ்க்கையின் ஜீவனை அதின் நிறைவினால் கண்டடையலாம் . விலையேறப் பெற்ற ஆண்டவரே, என் சகோதரரும் இரட்சகருமான இயேசுவே, அடியேனை உம்முடைய சமூகத்தினால் நிரப்பி தொட்டு ஆசீர்வதியும் , அதினால் அடியேனை சுற்றியுள்ளவர்களை உமது கிருபையால் ஆசீர்வதிப்பதன் மூலம் நான் உமக்கு ஊழியம் செய்ய முடியும். என் ஜீவ அப்பமாகிய இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து