இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இன்று முடிந்தவரை அநேகந்தரம் இந்த வாக்கியத்தை சொல்லுங்கள்: "இயேசுவே ஆண்டவர்." ஆனால் அதை வெறும் வாயினால் மாத்திரம் சொல்வதை விட, உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து சொல்லுங்கள். "கர்த்தர்" என்ற வார்த்தையை ஒரு ஒத்தவாக்கிய விளக்கவுரை வேதாகமத்தில் பார்ப்பீர்களானால் , பின்னர் கர்த்தர் என்று புதிய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ள அனைத்து குறிப்புகளையும் படியுங்கள் . உங்கள் இருதயத்தைத் திறந்து, எல்லா வகையிலும் உங்கள் வாழ்க்கையின் ஆண்டவராக இயேசுவிடம் கேளுங்கள், ஆரம்பகால சீஷர்களைப் போல அந்த அர்ப்பணிப்புடன் வாழுங்கள். இயேசுவே ஆண்டவர் ! "இயேசுவே ஆண்டவர்!"என்று நீங்கள் கூப்பிடும்போது, பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பி அதை உங்கள் வாழ்க்கையில் சொல்லவும், வாழவும் உங்களுக்கு அதிகாரம் அளிப்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். நீங்கள் அல்லது நாங்கள் இயேசுவே ஆண்டவர் அங்கீகரிக்கிறோமோ இல்லையோ . இருப்பினும், ஒரு நாள், இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (பிலிப்பியர் 2:10-11) அது நமக்கும் நாம் நேசிப்பவர்களுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும் போது, அதை யாவருக்கும் கற்பிப்போம்! இயேசுவே ஆண்டவர் !
என்னுடைய ஜெபம்
பிதாவே , நீர் சர்வவல்லமையுள்ள தேவன் . இயேசுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பியதற்காகவும் , அவரை அதிகாரத்தில் உம் வலது பக்கத்தில் அமரவைத்து, அவரை ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் ஆக்கியதற்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி. உமது குமாரனாகிய இயேசு, இன்று என் ஆண்டவராகவும், அவர் என்னை உம் நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரை ஒவ்வொரு நாளும் என் இருதயத்தில் ஆட்சி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போஸ்தலனாகிய தோமா அறிக்கையிட்டபடி , "என் ஆண்டவரும் மற்றும் என் கர்த்தரும் !" பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், என் இரட்சகராகிய என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை கனப்படுத்துவதற்காகவும் இந்த மேலான அறிக்கையை நான் செய்து, ஜெபிக்கிறேன் . ஆமென்.