இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உயிருள்ள சரீரத்திலிருந்து தகர்க்கப்பட்ட ஒரு கை, செத்ததாயும் மற்றும் பயனற்ற உடல் உறுப்புமாய் இருக்கிறது . அப்படியே ஒரு கையிலிருந்து பிரிக்கப்பட்ட விரல்களால் எழுதவோ, பிடிக்கவோ , வேலை செய்யவோ அல்லது வண்ணம் தீட்டவோ முடியாது. உயிருள்ள உடலிலிருந்து பிரிக்கப்பட்ட காலால் நடக்க முடியாது. நாம் ஒருவருக்கொருவர் தேவைப்படுவதால் நாம் ஒருவருக்கொருவர் சொந்தமானவர்கள். நாம் ஒருவருக்கொருவர் சொந்தமானவர்கள், ஏனென்றால் நாம் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள், அவர் தனது சரீரத்தை ஒன்றாகப் சேர்த்து , அவருடைய தலைமை மற்றும் கிருபையின் காரணமாக அதை ஜீவனுள்ளதாக நிரப்புகிறார். நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாக நடக்கும்போதும், நம்முடைய தலையாகிய கிறிஸ்துவின் வழிகாட்டுதலைப் பின்பற்றும்போதும், தேவனானவர் நம்மை எதற்காக உண்டாக்கினார் என்பதை நம் சுதந்திரமாக காண்கிறோம்! சரீர நன்மைக்காக ஒவ்வொரு அவயமும் தன் பயனை முழு சரீரத்துக்கு வழங்குவதால் கிறிஸ்துவின் சரீரம் அதன் நோக்கத்தையும் பயனையும் காண்கிறது. சீஷர்களாகிய நாம் சரீர மற்ற அவயங்களும் தேவனின் வேலைக்கும் நம்மை அர்ப்பணிக்கும்போது நமது பயனைக் கண்டறிகிறோம்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , ஜீவனுள்ள , ஆற்றல்மிக்க, வல்லமை வாய்ந்த மற்றும் நித்தியமான ஒரு பகுதியாக என்னை உருவாக்கியதற்காக நன்றி. கிறிஸ்துவின் சரீரத்திற்காகப் பயன்படுத்த எனக்கு விசேஷ திறமைகளையும் ஈவுகளையும் கொடுத்ததற்காக நன்றி. உமது மக்களின் நன்மைக்காகவும், நான் ஜெபிக்கும் என் கர்த்தராகிய இயேசுவை மகிமைப்படுத்தவும் என் ஈவுகளையும்,திறன்களையும் கண்டுபிடித்து பயன்படுத்த எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்,ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து