இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் இளைஞனாக இருந்தபோது, ​​நான் எப்போதும் சிட்சையை வெறுக்கிறவனை போலிருந்தேன் . இது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. பெரும்பாலான நேரங்களில், நான் சிட்சையை விரும்பவில்லை. இருப்பினும், சில நேரங்களில், என் பெற்றோரின் கவனத்தை ஈர்க்க அப்படியாய் நான் "நடித்தேன்". அவர்களுடைய சிட்சையின் வழியாய் என்னுடைய காரியங்களை பெறுவது ! இப்போது நான் வயதில் முதிர்ச்சி பெற்றுவிட்டேன் , என்னை உறுதியாக சிட்சிக்கவும் , அன்பாக வழிநடத்தவும், மீண்டும் மீண்டும் என்னை ஊக்கப்படுத்தவும் என் பெற்றோர் என்னை நேசித்ததற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களின் சிட்சையும், பயிற்சியும் எனக்கு பல ஆசீர்வாதங்களை அளித்துள்ளது மற்றும் தேவன் என் வாழ்க்கையில் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியது. இதே போன்ற காரணங்களுக்காக என் வாழ்வில் தேவனின் சிட்சையை நான் அங்கீகரித்து பாராட்ட வேண்டும்! அன்பின் பற்றாக்குறை வெறுப்பல்ல ஆனால் அலட்சியம். கவலைக்கு எதிரானது சிட்சையின் மேல் நமக்கு உள்ள விருப்பமின்மை. தேவனுக்கு நன்றி, அவர் நம்மை நேசிக்கிறார் மற்றும் நம் வாழ்வில் இடைப்படுவதற்கும் , இயேசுவின் மாதிரியை மற்றும் பரலோகத்தை நோக்கி நம் வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்கும் போதுமான அளவு அறிந்திருக்கிறார்.

என்னுடைய ஜெபம்

பரலோகத்திலுள்ள பிதாவே , உமது அன்பு, கிருபை மற்றும் இரக்கத்தின் ஒரு பகுதியாக என் வாழ்வில் உம்முடைய சிட்சை மற்றும் திருத்தத்தை அடையாளம் காண எனக்கு உதவுங்கள். சொல்லிலும், எண்ணத்திலும், செயலிலும் உம்மை மகிழ்வித்து, பிளவுபடாத இருதயத்துடன் உமக்காக எப்பொழுதும் வாழ விரும்புகிறேன். எவ்வாறாயினும், சில சமயங்களில் என் இருதயம் கலகத்தனமாக இருக்கும் அல்லது எனது தீர்மானம் பலவீனமாக இருக்கலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். உம் அன்பான சிட்சையின் மூலம் எனது ஆவிக்குரிய திசையை இழந்ததை அடையாளம் கண்டு, உமது அன்பு, கிருபை மற்றும் மன்னிப்புக்கு என்னை மீண்டும் வழிநடத்தியதற்காக நன்றி கூறுகிறேன் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து