இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மனித கைகளினால் கட்டப்பட்ட மிகச் சிறந்த கட்டுமானத் திட்டம் எது? இயேசுவானவர் இன்னும் மிகச் சிறந்தவர் ! நீங்கள் இதுவரை சென்ற மிக பரிசுத்தமான இடம் எது? இயேசுவானவர் மிகவும் பரிசுத்தமானவர்! நீங்கள் பார்வையிட்ட மிகவும் பிரமிக்க வைக்கும் ஸ்தலம் எது? இயேசுவானவர் மிகவும் ஆச்சரியமானவர் மற்றும் பரிசுத்தமானவர்! நீங்கள் இதுவரை கலந்துக்கொண்ட ஆவிக்குரிய ஊட்டமளிக்கும் நிகழ்வு எது? இயேசுவானவர் மிகவும் ஊட்டமளிக்கும், வளமான மற்றும் ஆசீர்வாதமாய் இருக்கிறார் ! இயேசுவானவரே மிகவும் பெரியவராய் இருக்கிறார் ! வேறு எதுவும் இல்லை, வேறு யாரும், அவருக்கு நிகர் யாருமே இல்லை . யோவான் ஸ்நானன் நமக்கு நினைவூட்டியது போல், எல்லாக் காலத்திலும் மிகப் பெரிய ஆவிக்குரிய தலைவர் அவரே. இயேசுவின் பாதரட்சையை குனிந்து அவிழ்க்கக்கூடத் தகுதியற்றவர்கள் நாம் . இயேசுவானவரே மிகவும் பெரியவர்!

என்னுடைய ஜெபம்

தேவனே , இயேசுவின் மூலம் எனக்கு வழி, சத்தியம் மற்றும் வாழ்க்கையை வெளிப்படுத்தியதற்காக நன்றி. நான் அவருடைய நாமத்தை தவறாகப் பயன்படுத்திய அல்லது அவருடைய மகிமையைக் குறைத்து மதிப்பிட்ட நேரங்களுக்காக என்னை மன்னித்தருளும் . அவர் சமூகத்திலே நான் இருக்க வேண்டிய பிள்ளை போன்ற மகிழ்ச்சியான அதிசய உணர்வை எனக்குள் மீட்டெடுங்கள். இயேசுவின் பரிசுத்தமான, அற்புதமான மற்றும் கிருபையான நாமத்தினாலே நான் வாழ்கிறேன், அந்த நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து