இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த நீதிமொழிகளில் சொல்லப்பட்ட வார்த்தையின் கொள்கை ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இது மெய்யான காரியமாகும் . கொலை, வஞ்சகம், வன்கொடுமை ஆகியவற்றை செய்து அந்த உச்சத்தை எட்டிய ஒரு தீய தலைவன் இன்னும் ஒரு தீயவரால் கொல்லப்படுகிறான். பிறருக்கு அழிவை ஏற்படுத்தியவர்களுக்கு அழிவு நிச்சயமாகவே வரும். இயேசு இவ்வுலகிற்கு வந்து மறைமுகமில்லாமல் எல்லா மக்களையும் நீதியாக நியாயந்தீர்க்கும்போது இந்தக் கொள்கை முழுமையாக உணரப்படும். அப்போது, தேவ நீதி சூரியனைப் போல பிரகாசிக்கும். இயேசுவும் அவருக்குச் சொந்தமானவர்களும் அவருடைய பரலோக மகிமையில் அவருடன் ஜெய ஜீவியம் செய்வார்கள் - இந்த மகிமையானது ஒருபோதும் கெட்டுப்போகாது, அழியாது, அல்லது மங்கவும் செய்யாது . இரக்கம் , அன்பு, ஜீவன் ஆகியவற்றுடன் நீதிஜெயம்பெற்று ஒருபோதும் மரணத்தை தழுவாது . ஒடுக்கப்பட்ட, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட, தேவனுக்காக மரித்த தேவனுடைய இராஜ்ஜியத்தின் மக்கள் அனைவரும், தேவன் தம்மை நேசிப்பவர்களுக்காக ஆயத்தப்படுத்திய நகரத்திற்குள் செல்வார்கள். எல்லா துன்மார்க்கமும் கவிழ்க்கப்பட்டு, இயேசுவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டவர்கள் தங்கள் கர்த்தரின் மகிமையான பிரசன்னத்தில் நித்தியக்காலமாக வாழ்வார்கள்!
என்னுடைய ஜெபம்
பரலோகத்திலுள்ள அன்பான பிதாவே , உமது ராஜ்ஜியம் வேகமாக நாங்கள் ஜீவனம் பண்ணும் உலகில் வல்லமையுடன் வளரவேண்டும் என்று ஜெபிக்கிறோம் . உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியிலும் செய்ய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். திமிர்பிடித்தவர்களையும் வன்முறையாளர்களையும் வீழ்த்துங்கள். பொல்லாதவர்களையும் கொலைகாரர்களையும் கவிழ்க்கப்பட்டு தள்ளப்படட்டும் . கர்த்தராகிய இயேசு தம்முடைய சத்துருக்கள் அனைவரின் மீதும் ஆட்சிசெய்து, உம் அன்பான பிள்ளைகளை உம்மிடம் கொண்டு வரும்போது, நீர் இயேசுவுக்குள் நீதிமான்களாக்கியவர்கள் உம் மகிமையான பிரசன்னத்திலும் கிருபையிலும் நிற்கட்டும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.