இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு ஆசீர்வாதத்தைப் சுதந்தரித்துக்கொள்ள என்ன ஒரு எளிய வழி: நாம் இயேசுவை மக்கள் முன்பாக அறிக்கைப்பண்ணுகிறோம் , மேலும் இயேசுவானவர் தேவனின் தூதர்களுக்கு முன்பாக நம்மை அறிக்கைப்பண்ணுகிறார் ! இயேசுவானவரை கைது செய்யப்பட்ட இரவில் பேதுருவை தடுமாறச் செய்த வலையில் நாம் சீக்கிக்கொள்ளக் கூடாது - நண்பர்கள் முன்பாக பெலனுள்ளவர்களாகவும் , விரோதிகளின் முன்பாக பெலவீனமாகவும் இருக்கிறோம் . நமது விசுவாசத்தை நண்பர்களுடன் "கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்" (1 பேதுரு 3:15) . இயேசுவை அறிந்தவர் என்றும், அதை நம் வார்த்தைகளாலும் கிரியையினாலும் வெளியரங்கமாக காண்பிக்கவும் அடையாளப்படுத்திக்கொள்ளவும் தயாராக இருப்போம் (அப்போஸ்தலர் 4:13). உலக மக்கள் அனைவரும் காணும் வகையில் நம் வாழ்வாலும் உதடுகளாலும் இயேசுவே நம் ஆண்டவர் என்பதை அறிக்கை செய்வோம்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , என் நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு முன்பாக நான் செய்வது போல, என்னுடைய எதிரிகள், துரோகிகள் மற்றும் விமர்சகர்களுக்கு முன்பாக இயேசுவை ஆண்டவராக நம்பிக்கையுடன் அறிக்கையிட எனக்கு தைரியத்தை தாரும் . நான் யாருடைய நாமத்தில் ஜெபிக்கிறேனோ, அந்த இயேசுவில் என் நம்பிக்கையை கனத்துடன் பகிர்ந்துகொள்வதால், கர்த்தராகிய இயேசுவின் மேலுள்ள என் விசுவாசம் மற்றவர்களுக்கு முன்பாக தைரியமாக பிரகாசிக்கட்டும் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து