இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம் அன்பு போலியாகவோ, மாயமானதோ அல்லது நிலையற்றதாகவோ இருக்க முடியாது! அப்படியானால் நாம் தீமையை வெறுக்கிறோம் என்று அர்த்தம். நாங்கள் அதிலிருந்து விலகி இருப்பது மட்டுமல்லாமல், அதை வெறுக்கிறோம். அதே சமயம், நன்மை மற்றும் நீதியை அன்புடன் நெருங்கி வருவதற்கு நாம் நம்மை அர்ப்பணிக்கிறோம். எங்கள் நோக்கங்கள் அல்லது உந்துதல்களில் குழப்பம் ஏதுமில்லை, சரியானது, நன்மையானது மற்றும் பரிசுத்தமானது என்பதில் மாத்திரமே எங்கள் தீவிர ஆசை. நன்மையையே பற்றிக் கொள்கிறோம்!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, இயேசுவின் தியாகத்தினாலும், அவர்மீது எனக்குள்ள விசுவாசத்தினாலும் நீர் என்னை நீதியுள்ளவனாகவும் பரிசுத்தமானவனாகவும் மறுபடியும் உருவாக்கினீர் என்பதை நான் அறிவேன். இப்போதும் , உமது கிருபையினால் என்னை நீர் விரும்புகிற மாதிரி வாழ எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலமாய் , தயவுசெய்து உம் அன்பினால் என்னை நிரப்புங்கள், மேலும் என் இருதயத்தில் குடியிருக்கும் அசுத்தமான, தீய அல்லது வெறித்தனமான காரியம் யாவற்றையும் விரட்டியருளும் . என் அன்பு மெய்யாக இருக்க வேண்டும். நான் நன்மையை பற்றிக்கொள்ள விரும்புகிறேன். நான் தீயவை அனைத்தையும் தூக்கி எறிய விரும்புகிறேன், அதனால் நான் உமக்கு மகிழ்ச்சியையும், கனத்தையும் கொண்டுவருவேன் ! இயேசுவின் நாமத்தினாலே உமக்கு நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன். ஆமென்.