இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மோசேயைப் போன்ற தீர்க்கதரிசிதான் இயேசுவானவர் . அவர் வந்து தேவனின் சத்தியத்தை நமக்கு கற்பித்தார். சுவிசேஷ புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அவருடைய வார்த்தைகளை அவர் நமக்குக் கற்பித்துள்ளார். அவர் செய்த கிரியைகளின் மூலமாக அவர் தனது முன்மாதிரியை நமக்குக் கற்பித்தார். அவர் நமக்குள் வாசமாயிருக்கும் மாறாத பிரசன்னத்தின் மூலமாகவும், அவர் நமக்குக் கொடுத்த ஆவியியானவரின் மூலமாகவும் நமக்குக் கற்பிக்கிறார். ஆனால் அவர் சொன்னதை நாம் நம்முடைய கிரியைகளினால் காண்பிக்கும் பொழுது அவர் நமக்கு மிகவும் அதிகமாய் கற்பிக்கிறார்.

என்னுடைய ஜெபம்

சீனாய் மலையிலிருந்து இடி முழக்கத்தினால் , உமது நியாயப்பிரமாண சட்டத்தை உமது அடியானாகிய மோசேக்கு தந்தருளின எங்கள் தேவனே , இன்றும் நீர் இயேசுவின் மூலமாக எங்களோடு பேசுகிறீர் என்று விசுவாசிக்கிறேன் . அவருடைய சத்தத்தை மாத்திரம் கேட்காமல், அவருடைய செய்தியையும் வாழ்க்கையையும் கேட்டு அறிந்துகொண்டு அதை இன்று எங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த எனக்கு உதவுங்கள். என் அன்றாட வாழ்க்கையின் ஆராதனையின் மூலமாக நான் உம்மை இன்னும் பரிபூரணமாக மகிமைப்படுத்துவதற்காக எங்களை மென்மையாய் சீர்ப்படுத்தியருளும் , கீழ்ப்படிதலின் வழியில் என்னை வழிநடத்தவும். இயேசுவின் வல்லமையான நாமத்தின் மூலமாக நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து