இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கர்த்தருக்குச் ஊழியம் செய்ய இயேசுவின் சீஷர்கள் ஆவிக்குரிய ஆர்வத்துடன் இருக்க வேண்டும் என்று பவுலானவர் வலியுறுத்துகிறார். நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் ஆர்வமாக இருக்க வேண்டும் என்று பரலோகத்தின் தேவன் விரும்புகிறார் என்பதை இயேசுவானவர் இன்னும் அதிகமாய் வலியுறுத்துகிறார் . அவர் லவோதிக்கேயாவில் உள்ள விசுவாசிகளிடம் மனந்திரும்பவும், உண்மையும் உத்தமுமாய் இருக்கும்படி கூறினார்: உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராவாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திப்பண்ணிப்போடுவேன். (வெளிப்படுத்தின விசேஷம் 3:15,16) இயேசு நம்மை மீட்பதற்கு அநேக காரியங்களை செய்திருக்கிறார். ஆகையால் தேவனுக்கு பற்றுதலாய் வாழ்க்கையை வாழ்வோம், மற்றும் "அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே (நாம்) அனலாயிருப்போம் ;".

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே மற்றும் எல்லா காலங்களுக்கும் இராஜாவே, நான் சில சமயங்களில் என் ஆவிக்குரிய அக்கினியை அவித்துப்போட அனுமதித்தேன், அதினால் என் ஆவிக்குரிய உற்சாகம் குறைகிறது என்று நான் ஒப்புக்கொள்கிறேன்: . இயேசுவே, தயவுக்கூர்ந்து பரிசுத்த ஆவியானவர் அக்கினியுடன் இறங்கி வந்து, நான் என் வாழ்க்கையை வாழும்போதும், என்னைச் சுற்றியிருப்பவர்களைப் உற்சாகப்படுத்தும் போதும் , உமக்காகப் புதுப்பிக்கப்பட்ட வைராக்கியத்தையும் ஆர்வத்தையும் என்னில் அனல்மூட்டி எழுப்பட்டும் . இன்றைய உலகில் உம் ஊழியத்தை ஆர்வத்துடனும் வெட்கமின்றியும் தொடர விரும்புகிறேன், மேலும் நான் இயேசுவை என் ஆண்டவராக நேசிக்கிறேன் என்பதைக் காண்பிக்கும் விதமாய் ஒரு துடிப்பான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்! பிதாவே உமக்கே கனமும், வல்லமையும், மாட்சிமையும் எப்பொழுதும் உண்டாவதாக, இவை யாவற்றையும் இயேசுவின் நாமத்தினாலே கேட்டு ஜெபிக்கிறேன், ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து