இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
காலம் நிறைவேறும் வரை தேவனானவர் காத்திருந்து ஏற்ற நேரத்திலே இயேசுவை இவ்வுலகிற்க்கு அனுப்பினார். ஏற்ற நேரம் - ரோமானிய ஆட்சி, யூதர்களுக்கு அடிபணிதல், நல்ல சாலைகள், சுதந்திரம், ஒரு அளவு பாதுகாப்பு, ஒரு பொதுவான வர்த்தக மொழி, கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான தண்டனை மற்றும் மதச் சண்டைகள். இதுபோன்ற சமயங்களில், அவர் தமது நேசகுமாரனை ஒரு ஸ்தீரியின் வித்தினாலே குமாரனாக அனுப்பினார். எங்கள் வீட்டிற்கு மீட்பரை அனுப்புவதற்காக அவர் தமது வீடாகிய பரலோகத்தினின்று விட்டு இறங்கி வர செய்தார். அவர் அதைச் செய்தார், அதனால் நாம் அவருடைய பிள்ளைகளாக இருக்க வேண்டும் - பிள்ளைகளை போல நடிக்கவில்லை, ஆனால் மெய்யாக சொந்த குமாரரும் குமாரத்திகளுமாய், முழு உரிமைகளுடன் இருக்கும்படியாய் செய்தார் . அதனால் அவர் தேவனாக மட்டுமல்ல, அப்பா பிதாவாகவும் இருக்க முடியும்.
என்னுடைய ஜெபம்
அப்பா பிதாவே , உம்முடைய நாமம் கூட எனக்கு விலையேறப்பெற்றது. நான் உம்மை அப்பா பிதாவே என்று அழைப்பதற்கு எவ்வளவு விலையை கொடுத்தீர் என்று நான் திகைக்கிறேன். அத்தகைய விலையேறப்பெற்ற அன்பு எனக்கு புரியவில்லை, ஆனால் அதற்காக உமக்கு கோடான கோடி நன்றி. உம்மை அப்பா பிதாவே என்று அழைக்க எனக்கு எவ்வளவேணும் தகுதி இல்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் அது மிகவும் சரி. அப்பா என்ற வார்த்தையின் சத்தத்தில் உள்ளே ஏதோ எதிரொலிக்கிறது — பரிசுத்தம், நீதிமான், சர்வ வல்லமையுள்ளவர், பிதாவே ! நான் ஒருபோதும் ஒரு நல்ல குமாரனாக இருக்க மாட்டேன் என்று எனக்குத் தெரியும், நான் உம்முடைய பிள்ளையாக இருப்பதினாலும் நீரும் அடியேனை உம் பிள்ளையாக ஏற்றுக்கொண்டதினாலும் அந்த நம்பிக்கையிலே நான் இன்று இளைப்பாறுகிறேன் . இயேசுவின் நாமத்தில் உமக்கு நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.