இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மை குடும்பமாக்குவது எந்த காரியம் என்று உங்களுக்கு தெரியுமா? தேவனின் குடும்பத்தில், பரிசுத்த ஆவியானவர் நம்மை ஒன்றாக ஆக்குகிறார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவருடைய நித்திய குடும்பத்தில் நம்முடைய புதிய பிறப்பால் நாம் தேவனின் பிள்ளையாக மறுருபமாக்கப்பட்டோம். பரிசுத்த ஆவி என்பது தேவனின் பிரசன்னம் மற்றும் நம்மில் உள்ள வல்லமை மற்றும் தேவனின் ஆவிக்குரிய வித்து அது நம்மை ஒருவருக்கொருவர் மற்றும் நம் பிதாவாகிய தேவனுடன் நம்மை இணைக்கிறது. இந்த ஆவிக்குரிய பந்தம் மனித குடும்பம், இனம், தேசியம், பாலினம் மற்றும் அனைத்து மனித தடைகளையும் தாண்டியது . பரிசுத்த ஆவியின் பிரசன்னம் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை உறுதிப்படுத்துகிறது மற்றும் பூமியில் சரீரத்தில் இயேசுவனவரை போல நடக்க உதவி செய்கிறது .

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே நீர் எனக்கு அளித்த பரிசுத்த ஆவியின் ஈவுக்காக உமக்கு கோடான கோடி நன்றி. பரிசுத்த ஆவியின் மூலமாய் உம் சமூகம் என் மாம்ச சரீரத்தில் வாசம் செய்யும்படி அதை பரிசுத்த வாசஸ்தலமாக மாற்றியதற்காக நன்றி. கர்த்தராகிய இயேசுவே, பரிசுத்த ஆவியை என்மேல் பொழிந்து என்னைப் பரிசுத்தமாக்கியதற்காக நன்றி. அன்புள்ள பிதாவே, கிறிஸ்துவுக்குள் உள்ள என் சகோதர சகோதரிகள் யாராக இருந்தாலும், அவர்களை குறித்து முன்குறித்த யோசனையின் சுவரையும் இடித்துத் தள்ள, ஆசீர்வாதமாய் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து என் இருதயத்தில் செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்களுடைய ஒற்றுமையின் சத்தியம் பரலோகத்தில் உமக்கு மெய்யாக இருப்பதைப் போலவே, பரிசுத்த ஆவியானவர் எங்களை இங்கே பூமியில் ஒன்றாக்கும்படி நான் ஜெபிக்கிறேன். நம்மையும் ஒன்றாக்கும்படி மரித்தது உயிர்த்தெழுந்தவர் நாமத்தினாலே வேண்டிக்கொள்ளுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து