இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மனித உடல் பாகங்கள், உறுப்புகள், முக்கிய உறுப்புகள், அமைப்புகள் மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்த கட்டமைப்புகள் ஆகியவற்றின் அற்புதமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது, இந்த பலவிதமான கரிம கட்டமைப்புகள் மற்றும் அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன, மேலும் மனித உடலால் அற்புதமான விஷயங்களைச் செய்ய முடியும். கிறிஸ்துவின் சரீரத்திலும் இதுவே உண்மை! நாம் ஒவ்வொருவரும் நம் பங்கைச் செய்து, நம்முடைய ஈவுகளையும்,திறன்களையும் முழு நன்மைக்காக ஒப்புக்கொடுக்கும் போது , கிறிஸ்து நம் மூலம் அற்புதமான விஷயங்களைச் செய்ய முடியும்! ஒட்டுமொத்த சரீரமும், கிறிஸ்துவின் பிரசன்னமாகச் செயல்படுவதும், ஒவ்வொரு அவயமும் , அமைப்பும், அது செய்ய வரம் பெற்றபடி செயல்படும் பகுதியும் இன்றியமையாதவை மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்தவை. கிறிஸ்துவின் சரீரமாகிய நாம், இயேசுவின் பிரசன்னமாக உலகிற்கு ஊழியம் செய்ய, அவர் தேடுகின்ற , உதவி செய்ய விரும்புகிற இன்னுமாய் அவர் இரட்சிக்க விரும்புகிற மக்களிடையே ஊழியம் செய்யது , உங்களுடைய பங்களிப்பை , திறமையைப் பயன்படுத்தி, உங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவது மிகவும் அவசியம்!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் அன்பானவருமான பிதாவே, கிறிஸ்துவின் சரீரத்தில் எங்களுடைய இடத்தையும் நோக்கத்தையும் அறிந்துகொள்ள எங்களுக்கு ஞானத்தை தாரும் , இதன்மூலம் உமது குமாரனின் கிருபையை அறிய வேண்டிய உலகில் உள்ளவர்களைத் தேடவும், உதவி செய்யவும், இரட்சிக்கவும் நாங்கள் உண்மையுடனும், முழு பெலனுடனும் ஊழியம் செய்ய முடியும். அதினால் நாங்கள் உமக்கு கனமும், வல்லமையும் கொண்டுவருவோம் அன்பான பிதாவே . பரலோகத்தின் தேவன் நமக்குக் கொடுத்த ஆவியின் வரத்தை பயன்படுத்தும்போது பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்தட்டும், இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.