இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய துதி தேவனை பிரியப்படுத்துவது மாத்திரமல்லாமல், இது ஏழைகள் மத்தியில் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் உருவாக்க வேண்டும்! ஏன்? ஏனென்றால், தேவன் செய்கிற காரியங்களுக்காக அவரைப் போற்றுவது மட்டுமல்லாமல், அவர் ஏழைகளுக்கு செய்வதைப் போலவே அவருடன் சேர்ந்து கொண்டு அப்படி செய்து அவரை துதிக்கும்படி நம்மை அழைக்கிறது. நாம் துதிக்கும்படி தேவனின் உதாரத்துவம் நம்மை உற்சாகப்படுத்தும், அது போலவே நாமும் தாராளமாய் நடக்க , நமது பெருந்தன்மையைக் கிளற வேண்டும், இது மற்றவர்களை ஆசீர்வதித்து, அவர்களையும் தேவனை துதிக்க வழிவகை செய்கிறது !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே , சர்வவல்லமையும் மாட்சிமையும் நிறைந்த ராஜாவே , நீர் எல்லா கனத்துக்கும் துதிக்கும் பாத்திரர் . நீர் அற்புதமான மற்றும் வல்லமையான காரியங்களைச் செய்துள்ளீர் . நீர் உம்முடைய ஆசீர்வாதங்களை என் மீது பொழிந்துள்ளீர், அதற்காக நன்றிகளை செலுத்துகிறேன். உமது வாக்குதத்தத்தை நிறைவேற்றி , இரட்சிப்பின் வழியை எனக்குத் தந்தீர். மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், ஊழியஞ் செய்யவும், ஊக்கப்படுத்தவும், உமது மகிமையையும்,பெருந்தன்மையையும் என் மகிழ்ச்சியான துதிகளால் சுட்டிக்காட்ட நான் உறுதியளிக்கும்போது, ​​தயவுசெய்து எனக்கு அதிகாரம் தந்து பெலப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து