இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

துன்பம் தோழமையை விரும்பினாலும், துக்கம் நம்மில் பலரை பின்வாங்கவும் மறைந்துக்கொள்ளவும் வழிவகுக்கும். எனவே, அன்புக்குரியவர்களை இழந்தவர்களை நினைவில் கொள்வோம், குறிப்பாக இந்த ஆண்டின் போது. அவர்களின் அன்புக்குரியவர்களின் உறவை நீங்கள் எவ்வாறு போற்றுகிறீர்கள் மற்றும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்காக ஏங்குகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களின் அன்புக்குரியவர்களைப் பற்றி நீங்கள் பேசும்போது, ​​தயவுசெய்து அவர்களின் பெயர்களை கண்டிப்பாக குறிப்பிடவும். அவர்களின் மரணத்திற்குப் பின்னால் உள்ள காரணத்தை நீங்கள் விளக்க வேண்டும் அல்லது துக்கப்படுபவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் - நினைவில் கொள்ளுங்கள், யோபின் ஆலோசகர்கள் பேசத் தொடங்கும் வரை, தேவனுடைய சித்தத்தை பாதுகக்க முயற்சிக்கும் வரை மற்றும் யோபு ஏன் துன்பப்படுகிறார் என்பதை விளக்கும் வரை அவர்களுக்கு ஒரு ஆசீர்வாதம் இருந்தது. அன்பு ஊழியம் செய்கிறது , ஊக்குவிக்கிறது , காத்திருக்கிறது ; எனவே, ஊழியம் செய்யவும், ஊக்குவிக்கவும், காத்திருக்கவும். உங்கள் ஐக்கியத்தில் இருக்கும் துக்கப்படுபவர்கள் மற்றும் மகிழ்ச்சியடைபவர்களுடன் இதைச் செய்யுங்கள். இதை உண்மையான மகிழ்ச்சி மற்றும் ஆறுதலின் பருவமாக ஆக்குங்கள். அவர்களின் சிரிப்பைப் பகிர்ந்துகொண்டு, அவர்களின் நல்ல ஆச்சரியங்களினால் அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் அவர்களின் துயரத்தில் அவர்களோடு உறுதியாய் நில்லுங்கள் . தங்கள் சோகத்தில் மகிழ்ச்சியின் தருணங்களைக் கொண்டிருப்பது சரியா என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், இயேசுவுக்குள் உள்ள அன்பான நண்பரே, நீங்கள் மகிழ்ச்சி நிறைந்த மக்களைச் சுற்றி இருப்பதை உறுதிசெய்து, அவர்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள்! நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால் ஊழியம் செய்வது மிகவும் கடினம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமான தேவனே, ஆறுதலளிக்கும் பிதாவே, எங்களை சுற்றியுள்ள மக்களில் துக்கப்படுகிறவர்களை பார்க்கக் கண்களையும், அன்பான அரவணைப்பை வழங்க இருதயங்களையும் எங்களுக்குத் தந்தருளும். வருடத்தின் இந்த விசேஷ நேரத்தில், துக்கத்தில் இருப்பவர்களை ஆசீர்வதிக்க எங்களைப் பயன்படுத்துங்கள், மகிழ்ச்சியில் இருப்பவர்களுடன் சேர்ந்து இருக்க எங்களுக்கு உதவுங்கள். எங்கள் ஆறுதலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஆதாரமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து