இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பலர் வாழ்க்கையில் தூங்குகிறதுபோல கண்டும் காணாமலும் நடக்கிறார்கள். உண்மையில் வாழ்வதற்கு அவர்கள் ஒருபோதும் விழித்திருக்க மாட்டார்கள்.ஆனால் நாம் அதை நம் வாழ்வில் செய்யப்போவதில்லை! நாம் உயிருடன் இருக்கிறோம், ஏனென்றால் இயேசுவானவர் வந்து நமக்கு ஜீவனைத் தந்தது மட்டுமல்லாமல், எப்படி வாழ வேண்டும் என்பதையும் அவர் நமக்குக் காட்டியுள்ளார்.எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கப் போகிறோம். நாம் சுயகட்டுப்பாட்டுடன் இருக்கப் போகிறோம். நாம் முற்றிலுமாய் ஜீவனுள்ளவர்களாக இருக்கப் போகிறோம், ஏனென்றால் இயேசுவின் வருகை சமீபத்திலும், நமது இரட்சிப்பு மற்றும் மீட்புக்கான நாள் சீக்கிரத்தில் வரவிருக்கிறது .

என்னுடைய ஜெபம்

பரலோகப் பிதாவே , இயேசுவுக்காக வாழ வேண்டும் என்ற உணர்வை நான் இழந்த நேரங்களுக்காக என்னை மன்னியுங்கள்.எனக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவரைப் பயன்படுத்தி , என் கண்களை விசாலமாக திறந்து, சிறந்த மற்றும் பரலோகத்திற்குரிய விஷயங்களில் என் இதயத்தை வைத்து அவருக்குச் சேவை செய்ய எனக்கு உற்சாகமுள்ள ஆவியைத்தாரும் .நான் கேட்பதற்கும் அல்லது நினைப்பதற்க்கும் அதிகமாய் உம்மால் செய்ய முடியும், மேலும் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் தயவுகூர்ந்து பெரிய தரிசனங்களை கானும்படியும் ம்ற்றும் உம் மகிமைக்காக பெரிய விஷயங்களைக் கற்பனை செய்யவும் என்னை உற்சாகப்படுத்தும். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து