இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம்மைப் போலவே இயேசுவும் சோதிக்கப்பட்டார்! நம்மைப் போலவே அவரும் பாடுப்பட்டார் ! தேவனானவர் , துன்பத்தையும் மரணத்தையும் நேரடியாக எதிர்கொள்வது எப்படி என்பதை அறிந்த ஒருவர் பரலோகத்தில் இருப்பதை அவருடைய கிருபையினால் உறுதி செய்தார். இந்த அறிவு அவருடைய சர்வ ஞானத்தால் மாத்திரமல்ல ; அவருடைய குமாரன் நம்முடன் பகிர்ந்து கொண்ட மனித அனுபவத்தின் மூலமாகவும் நம்மை அறிந்திருக்கிறார். பரலோகத்தின் அறிவு மனித யதார்த்தத்தில் மனித அனுபவத்தை உள்ளடக்கியது என்று இயேசுவானவர் உத்தரவாதம் அளிக்கிறார். இயேசுவானவர் மரண சரீரத்தில் துன்பப்படுவதை அறிந்திருப்பதற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களல்லவா, அதனால் அவர் இப்போது நம் மரணப் போராட்டங்களை எதிர்கொள்ளவும், ஆசீர்வதிக்கவும், இறுதியில் நமக்கு உதவவும் சதாகாலமும் ஜீவிக்கிறார். அவர் எனக்காக கஷ்டப்பட நேர்ந்ததற்காக வருந்துகிறேன்; நான் அவரை போல பாடுபடும்போது அவர் என்னுடன் இருக்கிறார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இயேசுவானவர் சோதிக்கப்பட்டதற்காகவும் போராட்டத்தை அனுபவித்தற்காக நான் வருந்துகிறேன்; நான் கையிட்டு காரியங்களை செய்யும்போது எனக்கு உதவி செய்ய அவர் என்னுடனே இருக்கிறார் என்பதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!
என்னுடைய ஜெபம்
அன்பும்,சர்வவல்லமையுமுள்ள தேவனே , நீர் அடியேனை அறிந்திருக்கிறீர், மற்றும் எனக்கு எது சிறந்தது என்பதை நீர் அறிந்திருக்கிறீர் அதற்காக நன்றி செலுத்துகிறேன். ஆனால் பிதாவே , உம் பராமரிப்பு மற்றும் புரிதலினால் நான் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன், ஏனென்றால் இயேசுவானவர் எங்களுடைய துன்பம் மற்றும் மரணத்தின் போராட்டத்தின் மல்யுத்த போட்டியில் எங்களோட பங்கு கொண்டார். இயேசுவே, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து எனக்காக பரிந்து பேசி வாதாடியதற்காக உமக்கு நன்றி. பிதாவின் கிருபையை தொடர்ந்து எங்கள் வாழ்க்கையில் அருள கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.