இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மீட்புடன் - இயேசு அப்படித்தான் வாழ்ந்தார்! நண்பர்கள், பாவிகள், எதிரிகள் என அவர் சந்தித்த அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார். அவருடைய இலக்கு சமமாகப் பெறுவதோ, அவருடைய உரிமையை பெறுவதோ அல்லது வாதங்களில் வெற்றி பெறுவதோ இல்லை. மீட்கும் நோக்கத்துடன் மக்களுடன் தொடர்புகொள்வதில் இயேசு கவனம் செலுத்தினார். அவர் அவர்களை முதலில் கண்டுபிடித்த இடத்தை விட ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக விட்டுவிடுவதே அவரது நோக்கமாய் இருந்தது . அப்போஸ்தலன் பவுலும் அதே குறிக்கோளுடன் வாழ்ந்தார். "பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமுமானேன். " (1 கொரிந்தியர் 9:22). இன்று நாம் படித்த கருப்பொருளிலிருந்து , அதையே செய்யும்படி நமக்கு ஒரு சவாலை கொடுக்கிறார்!

என்னுடைய ஜெபம்

தேவனே , நான் செய்த வெறுப்புகளுக்காகவும், மற்றவர்களைப் பற்றி நான் நினைத்த தீய காரியங்களுக்காகவும் என்னை மன்னித்தருளும் . இயேசுவைப் போல மற்றவர்களைப் பார்க்கவும் அவர்களை மதிக்கவும் எனக்கு உதவுங்கள்- அவர் பூமியில் இருந்தபோது,அவர்களுக்கு ஊழியம் செய்தபோது அவர் அவர்களை எப்படி மதிப்பார். எனது எல்லா வாழ்க்கை செயல்களிலும் அவை மீட்பின் தாக்கமாக இருக்க என்னைப் பயன்படுத்தவும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து