இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பாவங்களிலிருந்து (2 கொரிந்தியர் 5:21; 1யோவான் 4:10) அவர்களை (நம்மை) இரட்சிப்பதற்கு முன்பாக இயேசு முதலாவது எல்லா ஜனங்களுடைய பாவங்களை சுமக்க வேண்டும். அவர் மூலமாய் மன்னிப்பைப் பெறுவதற்கு முன்னமே அவருடைய சொந்த ஜனங்களே அவரை புறக்கணித்தார்கள் . இரட்சிப்புக்கு இயேசுவையே ஈவாக கொடுப்பது (பிதாவுக்கு)அவருக்கு விலையேறப்பெற்றது . இந்த இரண்டு பெரிய உண்மைகளை இவைகள் நமக்கு நினைப்பூட்டுகிறது: தேவன் நம்மை நாம் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு நேசிக்கிறார் இன்னுமாய் இரட்சிப்பு நம் யாவருக்கும் ஒரு மிக சிறந்த ஈவுவாகும் . இயேசுவுக்குள்ளாய் நாம் இந்த இரண்டு சத்தியத்தை அறிந்திருக்கிறோம், அவைகளை அனுபவிக்கிறோம்!
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே,இரட்சகரே, என் பாவத்தின் விலையை இயேசு சுமந்ததற்காக நன்றி. மனுஷ சாயலாகிய மாம்சத்தை எடுத்து, அதின் பாடுகளைதாங்கி அவமானங்களையும் எதிர்கொண்ட விலையேறப்பெற்ற ஆண்டவரே, அதன் மூலம் நான் இரட்சிக்கப்படுவதற்காக உமக்கு நன்றி. என் இரட்சிப்பு மற்ற எல்லா நாமங்களையும் இயேசுவுடன் ஒப்பிடுகையில் அது பரிசுத்தமுள்ளதாய் இருக்கிறது , அவருக்கு நான் என்னுடைய எல்லா நன்றிகளையும் துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறேன் . ஆமென்.