இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்துவின் சரீரத்தில் தேவன் நமக்கென்று ஒரு அவயத்தை ஒதுக்குகிறார் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். பல கொள்கைகள் தேவனின் சித்தத்துடன் தொடர்பு கொள்கின்றன: 1.முதலில், தேவன் நமக்குக் கொடுத்ததில் உண்மையாக இருங்கள் - நாம் சிறிய விஷயங்களில் உண்மையாக இருக்கும் வரை, பெரியவற்றை அவர் நம் கையில் ஒப்புக்கொடுக்க மாட்டார் (லூக்கா 16:10-13). 2.இரண்டாவதாக, அவர் நமக்குக் கொடுத்ததைப் பயன்படுத்தாவிட்டால், அது நம்மிடமிருந்து இருப்பதையும் எடுத்துவிடுவார் (மத். 25:14-30). மூன்றாவதாக, நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் - பாவம் அல்லது பொறுப்பற்ற நடத்தை நமது தொண்டு , ஊழியம் மற்றும் நமது ஈவுகளின் பயன்பாடு ஆகியவற்றின் செயல்திறனை பாதிக்கும் விளைவுகளை உருவாக்கலாம் (கலாத்தியர் 6:7-8). அடிப்படை காரியம் : தேவன் நமக்கு அளித்தவற்றில் உண்மையாக இருப்போம். புதிய வாய்ப்புகள் கிடைக்கும் போது அவர் நமக்கு அளித்த ஈவுகளையும், அவர் நமக்கு முன் வைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி அவருக்கு ஊழியம் செய்வோம். மற்றவர்களுக்கு நாம் செய்யும் ஊழியத்திலும் , கர்த்தருக்கு விசுவாசமாக இருப்பதிலும் நம் தோல்வியை சாத்தான் குறுக்கிடாதபடிக்கு, நம்முடைய தேர்ந்தெடுத்தன் மூலமாக அவரைக் கனப்படுத்துவோம்!

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்த ஈவுகளைப் பயன்படுத்தி உமது ராஜ்யத்தில் ஊழியம் செய்வதற்கான வாய்ப்புகளைப் பார்க்க எனக்கு உதவுங்கள். தயவு செய்து உம் ஊழியத்தில் எனது திறமையை வளர்த்துக் கொள்ளவும் , அதனால் நான் உமக்கு மகிமையையும் மற்றவர்களையும் ஆசீர்வதிக்க முடியும். இயேசுவின் நாமத்தினாலே , அடியேன் உமக்கு நன்றி செலுத்தி , ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து