இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் இயேசுவை கொண்டு என்ன செய்கிறார் என்பது ஆச்சரியமல்ல. ஆம், இது எதிர்பாராதது, ஆனால் அவர் வருவதைப் பற்றிய "குறிப்புகள்" மற்றும் தீர்க்கதரிசனங்கள் யூதர்களின் புத்தகமாகிய , நமது பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. பரிசுத்த தீர்க்கதரிசிகள் இதைப் பற்றி "நீண்ட காலத்திற்கு முன்பே" பேசியிருக்கிறாராகள் ஆனால் தீர்க்கதரிசிகளை விட, இயேசுவே தேவன் தம் வார்த்தையின்படி செய்கிறவர் . இயேசுவின் வருகை என்பது அவருடைய வாக்குத்தத்தங்களுக்கு தேவனுடைய பதிலாய் இருக்கிறது . அதனால்தான், தேவனின் வாக்குறுதிகள் அனைத்தும் இயேசுவை கொண்டும் அவர் மூலமாயும் ஆம் என்றும் "ஆமென்" என்றும் இருக்கிறது என்று பவுல் கூறுகிறார் (2 கொரிந்தியர் 1:20). இயேசுவின் மூலமாய் தேவன் நம்மோடிருக்கிறார் , ஊழியம் செய்கிறார், நம்மை பாதுகாக்கிறார் , நம்மை காப்பாற்றுகிறார், நம்மை மீட்கிறார், அவரை கொண்டு தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே , உமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றியதற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எங்களிடம் கூறின வார்த்தையைக் நீர் காப்பாற்றுவீரோ என்று நான் கவலைப்பட வேண்டியதில்லை என்பது எனக்குத் தெரியும்; உம்முடைய அன்பும், பண்பும், கிருபையையும் நீர் அவைகளை நிறைவேற்றுவீர் என்பதை உறுதிசெய்கிறது . எனவே, உமக்காக எனது அர்ப்பணிப்புகளையும் பொருத்தனைகளையும் நான் மதிக்க முற்படுகையில், தயவுகூர்ந்து உமக்கு மிகவும் விசுவாசமுள்ளவனாக இருக்க எனக்கு உதவியருளும் . இது உமக்கு முக்கியமானது என்பதை நான் அறிவேன், ஏனென்றால் நான் கீழ்ப்படிதலைக் கற்றுக் கொள்ள வேண்டும், ஆனால் உம்முடைய சொந்த குணாதிசயத்துடன் இன்னும் ஒரு பாத்திரத்தை உருவாக்க வேண்டும். என் இதயத்தின் விண்ணப்பங்களை கேட்டதற்காக உமக்கு நன்றி, இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து