இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
முதல் முறையே உண்மையைச் பேசுங்கள் , பிறகு நீங்கள் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை." பிரபல சபாநாயகர் சாம் ரேபர்னின் இந்த உண்மையான வார்த்தை இன்று நமக்கு நல்ல மருந்தாக உள்ளது. பொய் சொல்வது அந்த நேரத்தில் மகிழ்ச்சியாகத் தெரிகிறது, ஆனால் அது எப்பொழுதும் நம்மைப் பிடித்துக் கொள்கிறது மற்றும் நாம் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் கூடுதல் சுமையை நமக்குத் தருகிறது, ஒரு பொய் என்பது தற்காலிகமாக பிம்பத்தை உருவாக்கி கடைசியில் சுமைகளால் நிரப்பப்பட்ட ஒரு பொறியில் சிக்கிக்கொள்ள வகை செய்கிறது ஆனால் சத்தியம் என்றென்றும் நிலைத்து நிற்கிறது .
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, உண்மையைச் சொல்ல வேண்டியிருக்கும் போது பொய் சொல்லவும் , அதை மிகைப்படுத்தி , உண்மையைத் தடுத்து நிறுத்தியதற்காக என்னை மன்னியுங்கள். என் இதயமும் என் உதடுகளும் என்றென்றும் உமக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று நான் ஏங்குகிறேன் - உமக்கே என்றென்றும் - எனவே நான் பரிசுத்தமான ஒருமைப்பாட்டுடன் உண்மையைச் சொல்ல முற்படுகையில் தயவுசெய்து எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே உம் உதவியைக் கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.