இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இரட்சிப்பு எங்கிருந்து வருகிறது? ஏதோ தவறு இருக்கிறது என்று நாம் உணர்ந்து அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று நம் சிந்தனைகளில் வருகிறதா? நாம் சோர்வடைந்து அந்த விஷயத்தை கைவிட்டு இருக்க, அந்த விஷயங்களுக்காக மிகவும் நம்பிக்கையுடன் அதின்மேல் அதிக வெளிச்சத்தை விசுவதன் மூலம் இது வருகிறதா? இது அதிர்ஷ்டத்தின் மூலமாக இவைகள் வருகிறதா? நாம் நேர்மையாக நீதியுள்ளவர்களாகவும், நம் வழியில் வருவதற்கு தகுதியுடையவர்களாகவும் இருப்பதால் இவைகள் உண்டாகுகிறதா ? நியாயப்பிரமாண சட்டத்தில் உள்ள அனைத்தையும் கடுமையாகக் கடைப்பிடிப்பதால் வருமா? இல்லை! இரட்சிப்பும் மன்னிப்பும் ஒரே இடத்திலிருந்து பிறக்கிறது, "நம்முடைய தேவனின் உருக்கமான இரக்கத்தினாலேயே ."

என்னுடைய ஜெபம்

நான் அறிக்கையிடுகிறேன், பிதாவே , சில நேரங்களில் நான் என் இரட்சிப்பைப் பெற முயற்சித்தேன். மற்ற நேரங்களில், நான் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு , உம் இரக்கம் மற்றும் கிருபையை உதாசீனப்படுத்தினேன் . இன்று, பிதாவே , நான் உமக்காக வாழ விரும்புகிறேன்: இரட்சிக்கப்படுவதற்கோ அல்லது இரட்சிப்பைப் பெறுவதற்கோ அல்ல, ஆனால் உம்மைப் பிரியப்படுத்தவும் உம் குணாதிசயத்தையும் இயல்பையும் பிரதிபலிக்கவும். உமது இரக்கமும் கிருபையும் என்னை தகுதியற்ற வாழ்க்கை முறையிலிருந்து மீட்டுவிட்டன, என்னைப் போல பலர் சிக்கியிருப்பதை நான் காண்கிறேன். உம் இரட்சிப்புக்காக நன்றி, ஆனால் நான் சொல்வது, நினைப்பது மற்றும் செய்வது அனைத்திலும் அந்த இரட்சிப்பின் மகிழ்ச்சியைக் காண்பிக்கும் வகையில் வாழ எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து