இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு ராஜாவை விரும்பினார்கள் . ஆண்டவரும், இராஜாவுமாகிய தேவனுக்கு எதிரான இந்தக் கலகம் சாமுவேலின் இருதயத்தை நொறுக்கியது மற்றும் மக்களின் நம்பிக்கையற்ற குணம் தேவனைக் கோபப்படுத்தியது. சாமுவேல் தேவனுடைய மக்கள் தங்கள் அரசியல் கவலைகளால் தடுமாறி விழுந்தாலும், அவர்கள் கர்த்தரைக் கைவிடக்கூடாது என்பதை நினைப்பூட்டினார். மாறாக, அவர்களின் அரசியல் அக்கறைகள் தேவனை அவர்களின் முழு விசுவாசத்தினால் , ஆண்டவராகவும் ராஜாவாகவும் அவரை முழுமையாகச் சேவிப்பதற்கான விருப்பத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்று விரும்பினார் . அவர்களின் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட பயம், கோபம், திமிர், ஏமாற்றம், வெற்றி, தோல்வி, மோதல், குழப்பம், நம்பிக்கை, போட்டி மற்றும் சுய விருப்பம் ஆகியவற்றின் மத்தியில், தேவன் அவர்கள் தம்மிடம் திரும்ப வேண்டும் என்று விரும்பினார் - அவர்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் அல்ல, ஆனால் அவர்களின் நம்பிக்கை தேவனிடம் இருக்க வேண்டும்! இது நாம் கவனிக்க வேண்டிய வரலாற்றிலிருந்து ஒரு பாடம் என்று நான் நம்புகிறேன்.

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , ஆட்சியாளர்கள், தேசங்கள் மற்றும் எனது நம்பிக்கையின் ஆதாரம் குறித்து சில சமயங்களில் நாங்கள் காட்டிய எங்கள் பாவம், குறுகிய பார்வை மற்றும் முட்டாள்தனத்திற்காக எங்களை மன்னியுங்கள். எங்களின் தேவன், இரட்சகர், ராஜாதி ராஜா என நாங்கள் உம்மை நம்பும்போது, ​​உமது மன்னிப்பினால் சுத்திகரிக்கப்பட்டு, உமது பரிசுத்த ஆவியின் மறுருபமக்கும் வல்லமையினால் செயல்படுத்தப்பட்டு, ஒற்றுமையுள்ள இதயத்துடன் உமக்குச் ஊழியஞ் செய்ய விரும்புகிறோம். நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி, இந்த கிருபையை இயேசுவின் நாமத்தினாலே வேண்டுகிறோம், ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து