இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கடினமான மனிதர்கள் அல்லது சூழ்நிலைகளைக் கையாள்வதில் முதன்மையான இலக்கு இதுதான் என்பதை ஒரு நண்பர் எனக்கு நினைவூட்டுவார்: "நீங்கள் வெறுக்கும் ஒன்றாக மாறாதீர்கள்." அவர் அந்த நபரை வெறுப்பதை குறித்து இந்த இடத்தில் பேசவில்லை, ஆனால் நாம் தீயவர்களாகவும், பொல்லாதவர்களாகவும், ஆர்ப்பமானவர்களாகவும் , பாவமுள்ளவர்களாகவும் மாற விரும்ப மாட்டோம் என்று அர்த்தம் - அது என்னவென்றால் அவர்களின் நடத்தைகள் அல்லது குணாதிசயத்தை நாம் வெறுக்கும் விஷயங்களாகும் . நாம் கீழ்த்தரமான மற்றும் மரியாதையற்ற வழிமுறைகளால் பிசாசை வெல்ல மாட்டோம். நாம் தீமையை வென்று தீயவனை மறுபடியுமாக நரகத்தின் பாதாளத்திற்குத் தள்ளுகிறோம், மெய்யானதை செய்து, நம் இருதயங்களையும் வாழ்க்கையையும் நன்மையால் நிரப்புகிறோம் (பிலிப்பியர் 4:). தீமையை நன்மையால் வெல்வதற்கு இயேசுவை விட சிறந்த உதாரணம் இல்லை. நாம் விரும்பி பின்பற்ற விரும்பும் இயேசுவைப் போல் நம்மை மறுரூபமாக்குவதற்கு ஆவியானவர் நம்முடன் இணைந்து செயல்படுகிறார் (2 கொரிந்தியர் 3:18).

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , நாங்கள் இயேசுவைப் பின்பற்றுபவர்கள் என்பதால், எங்களை விமர்சிப்பவர்களையும், இழிந்தவர்களையும், பழிவாங்குபவர்களையும் நாங்கள் எதிர்க்கொள்ளும் போது , ​​உமது பரிசுத்த குணத்தால் எங்களை ஆசீர்வதியுங்கள். கிறிஸ்துவின் தன்மை மற்றும் பரிசுத்தத்தை பிரதிபலிக்கும் வகையில் எங்கள் விமர்சகர்களுக்கு பதிலளிக்க எங்களுக்கு உதவும். இயேசுவின் நாமத்தினாலே நாங்கள் இதைக் கேட்டு, ஜெபிக்கிறோம் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து