இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மாபெரிதான மற்றும் பரிசுத்த தேவன் உண்மையற்றவராய் இருக்க மாட்டார். அவருடைய மக்களாகிய நாம் அவருடைய கிருபையை பெறுவதற்குத் தகுதியற்றவர்களாக இருந்தாலும், அவர் தமது குணத்தை வெளிப்படுத்தவும், அவருடைய பரிசுத்த நாமத்தை கனம் பண்ணவும் செயல்படுவார். தேவன் ஏன் நம்மையும், இஸ்ரவேலர்களாகிய நம் முன்னோர்களை நேசிக்கிறார் , பாதுகாக்கிறார் என்பது கிருபை, அன்பு மற்றும் விசுவாசத்திற்கு குறைவானது அல்ல. குமாரனை நம்மிடையே வாழவும், சிலுவையில் மரித்து, மரணத்தைத் ஜெயித்து அவரை உயிர்த்தெழுப்பவும் பிதாவானவர் ஏன் அனுப்ப வேண்டும்? ஏனெனில் அவருடைய கிருபை , அன்பு மற்றும் விசுவாசம் ஆகியவற்றை விளங்கச்செய்யும்படி அப்படி செய்தார் . தேவன் கடந்த காலத்தில் இதைச் செய்திருந்தால், இனி வரும் நாட்களிலும், வருடங்களிலும் அவர் தம்முடைய கிருபையையும், அன்பையும், விசுவாசத்தையும் எவ்வளவு அதிகமாகக் காண்பிக்க மாட்டார்?!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, உமது கிருபை என்னை இரட்சித்தது மட்டுமன்றி, என்னுடைய தனிப்பட்ட தோல்விகளைப் பயன்படுத்தி, என் மீதான உமது அன்பை சந்தேகிக்கச் செய்ய, சாத்தான் முயற்சித்தாலும், உம் மாறாத கிருபை என்னைத் தாங்கி நிற்க செய்கிறது . என் தகுதியின்மையின் மீது வெற்றிபெற்று, உமது நீதியை ஆசீர்வதித்ததற்காக நன்றி, அதனால் நான் உமது ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் தகுதியுடையவனாக இருப்பேன். கிருபை நிரம்பியவரும், அன்பினால் நிறைந்தவரும், விசுவாசத்தில் நிலைத்திருப்பவருமாகிய உம் குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே உம்மைத் துதித்து ஜெபிக்கிறேன் . ஆமென்.