இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம்மில் பலருக்கு, இந்த ஆண்டின் இந்த காலகட்டத்திலே பரிசுகளை வழங்குவதற்கும் பெறுவதற்கும், நன்றி செலுத்துவதற்கும், உதாரத்துவ குணத்தினால் உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கும் ஒரு அழகான தருணம் . எல்லாவற்றிற்கும் மேலாக, உதாரத்துவகுணம் அற்புதமானது - பெற்றுக் கொள்ளும் இடத்திலே இருப்பவர்களுக்கு மாத்திரமல்ல , கொடுக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும் . இது தீமோத்தேயுவிடம் பவுலானவர் சொன்ன வார்த்தைகள் இன்று நமக்கு ஒரு நல்ல தாக்கத்தை உண்டுபண்ணுகிறது . இந்த வசனத்தை இணையத்தில், மின்னஞ்சல் மூலமாக, செயலியில், வானொலியில் அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகப் படிக்கக்கூடிய நம்மில் பெரும்பாலோர் உலகத்தோடு ஒப்பிடும் போது நாம் யாவரும் ஐசுவரிவான்களாக இருக்கிறோம். இது நாம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களுடன் உதாரத்துவமாய் இருப்பது பற்றிய இந்த வசனம் குறிப்பாகப் பொருந்தும். இந்த வருடத்தின் நல்ல ஈவுகளை வழங்கும் நேரம் இது , இப்போது மாத்திரமல்ல, இந்த ஆண்டு முழுவதும் நம்முடைய நேரம், பெலன் மற்றும் பண ஆசீர்வாதங்களுடன் தாராளமாக இருக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் தட்டியெழுப்ப தேவனின் வாய்ப்பாக இந்த வாக்கியம் இருக்கட்டும்!
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தேவனே , நீர் என்னுடன் மிகவும் தாராளமாக நடந்துகொண்டு, எண்ணி பார்க்கமுடியாத பல ஆசீர்வாதங்களை எனக்கு அளித்துள்ளீர். கொடுப்பதன் மகிழ்ச்சியைப் பற்றிய விழிப்புணர்வை என் இருதயத்தில் ஏற்படுத்தியதற்காக உமக்கு நன்றி!. அடியேனுடைய இருதயத்தை உம் இருதயத்தைப் போல தாராளமாகவும், இரக்கமுடனும் இருக்கம்படியாய் மாற்றும். சில சமயங்களில் என் பார்வையை மழுங்கடிக்கும் கவலை மற்றும் கஞ்சத்தனத்தை உடைத்து, என் நேரம், பணம், பெலன் மற்றும் அன்பைப் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள உதவிச் செய்யும் . இயேசுவின் வாழ்க்கை மற்றும் முன்மாதிரி மூலம் தாராளமாக இருப்பது எப்படி என்பதை எனக்குக் காண்பித்ததற்காக உமக்கு நன்றி. என் இரட்சகரும் ஆண்டவருமான இயேசுவின் நல்ல நாமத்தினாலே இவைகளை கேட்டு ஜெபிக்கிறேன். ஆமென்.