இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த விடுமுறை நாட்களின் அவசரத்திலும், நல்ல உணவை உண்ணும்போதும் பரிசுகளைப் பெறுவதிலும் கொடுப்பதிலுமான இந்த தருணத்தில் , ஜீவன் என்பது நமக்குத் தேவை என்றும், நாம் நினைக்கும் மிக அடிப்படையான உணவு மற்றும் உடை போன்றவற்றை விட மிக அதிகம் என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம். இந்த பருவத்தில் நாம் தேவனின் பார்வையை இழந்தால், அவருடைய ஊழியத்தை தவறவிட்டால், அல்லது நம் வாழ்வில் அவருடைய விருப்பத்தை தவறவிட்டால், நமக்கு நித்திய காலமாய் இருப்பது எது? அநேகம் இல்லை, நம்மிடம் இருப்பது எதுவுமே நீடித்திருக்காது . இந்த விடுமுறைக் காலத்தில் உங்களுக்காகவும் எனக்காகவும் நான் செய்யும் ஜெபம் என்னவென்றால், இயேசுவுக்குள் நம்முடைய வாழ்க்கையும் அவருடைய அன்பான கிருபையும் நமக்கான அளவற்ற எதிர்காலமும் என்ன,எது மிக முக்கியமானது, மதிப்புமிக்கது மற்றும் நீடித்தது என்பதை நினைவில் கொள்வோம் . இந்தப் காலத்தில் அந்த நித்தியமான வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம்!
என்னுடைய ஜெபம்
இனிய மற்றும் விலையேறப்பெற்ற தேவனே , நீர் வல்லமையில் ஆச்சரியமானவர் மற்றும் மகிமையில் அற்புதமானவர். ஆயினும்கூட, அன்பான பிதாவே , நீர் என்னைப் பற்றியும் நான் நேசிப்பவர்களைப் பற்றியும் அருகில் இருப்பதற்க்காகவும் மற்றும் நித்திய வாழ்க்கையின் மேல் அக்கறையுடன் இருப்பதற்காக நன்றி . உம்முடைய நித்திய அன்பினால் என்னை அறிந்து நேசித்ததற்காக நன்றி. தயவு செய்து, வாழ்க்கையின் நிலையற்ற விஷயங்களை - அழிந்துபோகக்கூடிய விஷயங்களை எனக்குத் தேவை என்று நான் நினைப்பதற்கு அப்பால் பார்க்க எனக்கு ஞானமுள்ள கண்களைத் தாரும் , மேலும் உம்மையும் உம் நிலையான சமூகத்தையும் கண்டறிய எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.