இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வார்த்தைகள் ஆழமானவை... அவை நமக்கு உணர்த்துவது அசாதாரணமானது, மனதைக் கவரக்கூடியாது ! இயேசுவானவர் வார்த்தையாக இருக்கிறார், ஆதியிலே தேவனோடு இருந்தவர், அண்ட சராசரங்கள் உருவாவதற்கு முன்பே தேவனாக, தேவனோடு இருந்தவர் (யோவான் 1:1-3). இயேசு தேவனுடைய உன்னத மற்றும் இறுதியான வார்த்தையாக இருக்கிறார் (எபிரேயர் 1:1-3). தண்ணீரை திராட்சரசமாக மாற்றி, ஐயாயிரம் பேருக்கு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் அளித்து, லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்பியவர் இந்த வார்த்தையாகிய இயேசுவே . அவர் பெத்லகேமில் பிறந்து, ஒரு தொழுவத்தின் முன்னனையில் அவருடைய தாயாகிய மரியாளினால் வைக்கப்பட்டபோது அவர் பூமியிலே மனித தோற்றத்திலே வெளிப்பட்டார் , ஆனால் இயேசுவானவர் சதாகாலமும் தேவனோடு ஒன்றாகவே இருந்தார், எப்போதும் தேவனின் குமாரனாக இருக்கிறார். இயேசு நம்மிடம் வந்தபோது, ​​தேவன் நம்மோடு இருக்கிறார் (மத்தேயு 1:23). இயேசுவானவர் மனித மாம்சத்தில் தேவனுடைய குமாரனாக மாம்சத்திலே வெளிப்பட்டார் . அவர் தம்முடைய மக்களாகிய நம்மைச் சந்திக்க வந்த தேவனுடைய குமாரன் (லூக்கா 7:16). மாற்கு நமக்கு நினைவூட்டியபடி இந்த வார்த்தை தேவனுடைய குமாரன் (மாற்கு 1:1). அவர் உயிர்த்தெழுதலின் மூலம் தேவனின் குமாரனாக அறிவிக்கப்பட்டார் (ரோமர் 1:3-4). இயேசுவின் காலத்தில் யூத மதத் தலைவர்கள் அறிந்திருந்தபடி, தேவனின் குமாரனாக நீர் தேவனுடன் ஒன்றாக இருக்கிறீர்கள் (யோவான் 10:30, 36, 17:20-23), தேவனுக்கு சமமானவர் (யோவான் 5:16-18), மற்றும் "நானே " இஸ்ரவேலின் உடன்படிக்கையின் தேவனாகிய கர்த்தர் என்று மோசேக்கு தன்னை வெளிப்படுத்தியவர் (யாத்திராகமம் 3:11-14; யோவான் 8:57-58). தேவன் பூமியில் எப்படி வாழ்வார் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், இயேசுவைப் பாருங்கள்; அவர், வார்த்தை, பூமியில் அவரது வாழ்க்கை மூலம் தேவனானவர் வெளிப்படுத்தப்பட்டார் (யோவான் 1:14-18). நாங்கள் தோமாவுடன் சேர்ந்து, இயேசுவிடம், "என் ஆண்டவரே, என் தேவனே !" எனக் கூறினோம்.(யோவான் 20:26-28).

என்னுடைய ஜெபம்

பிதாவே , இயேசுவினுடைய உம் நற்செய்தியையும், வேதாகமத்தில் உள்ள உம்முடைய வார்த்தையையும், அவருடைய ஜீவியத்தில் உள்ள வார்த்தையையும் அறிந்துகொள்ள எனக்கு உதவியருளும் . நான் இயேசுவைப் பின்பற்றி , உமக்காகவும், உம் மக்களுக்காகவும் அவரைப் போன்ற இருதயத்தைத் நாடும்போது , ​​தயவுக்கூர்ந்து உம்மைப் பற்றி எனக்கு மேலும் கற்பித்தருளும் . சொல்லிலும், செயலிலும், ஊக்கத்திலும், இயேசுவே என் ஆண்டவராக இருக்கட்டும். இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து