இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவரை பின்பற்றுபவர்கள் அவரோடே கூட மகிமையில் சேரும்படி, தம் ஜீவனை கொடுக்க தேவன் அவரை அழைத்தார் என்பதை உணர்ந்து அவர் இந்த உண்மையை அறிவித்தார். தியாகம் ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் அவரது கடைசி நேரத்தில் அவரது சீஷர்களின் தைரியம் இல்லாமை, தவறான தலையீடு மற்றும் நம்பிக்கையற்ற மனநிலை இருந்தபோதிலும், அவருடைய தியாக மரணம் அவர்களில் சிறந்ததை வெளிப்படுத்தும் என்று இயேசு மெய்யாகவே நம்பினார். அவருடைய தியாகத்தின் மாதிரியை பார்த்தது , அவரை பின்பற்றுவர்களும் மற்றவர்களை ஆசீர்வதிக்க தங்களையே தியாகமாக செய்வதன் மூலம் அவருடைய கிருபையையும் மகிமையையும் பகிர்ந்து கொள்ள அவை வழிவகுக்கும் என்று அவர் நம்பினார். இயேசுவின் மாதிரியை கவனித்து நம்மிலும் அவ்வாறே செய்ய அவர் விரும்புகிறார்! இன்று இயேசுவின் தியாகத்தை நாம் கனம் செய்யும்போது , ​​அவருடைய சீஷர்களுக்கும் அவர்களுக்குப் பின் வந்த மற்றவர்களுக்கும் அவர் ஆற்றிய தாக்கத்தைப் பற்றி கூறி அவர் மிகச்சிறந்தவர் என்பதை நிரூபிப்போம். இயேசு தன்னை ஒரு விதையாக நிலத்தில் வைத்து மரித்தார், ஆனால் அவருடைய மரணம் பல விதைகளை உருவாக்கியது, அது அவருடைய கிருபையை தொடர்ந்து நிலைக்கும்படி செய்வதினால் நித்திய நம்பிக்கைக்கு அவர்களின் இருதயங்களைத் ஆயத்தம் வழிவகை செய்கிறது !

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் தேவனே , பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் என்னை மீட்க உம்முடைய குமாரனும் எங்கள் ஆண்டவராகிய இயேசுவானவர் செய்த யாவற்றிற்காகவும் நன்றி. பரலோகத்தை விட்டு இங்கே எங்களிடையே வந்து வாழ்ந்ததற்காக நன்றி. அனைத்து வகையான மக்களுக்காக உம் நேரத்தையும் அன்பையும் வழங்கியதற்காகவும், இரக்கமுள்ளவராகவும், பரிசுத்த குணம் நிறைந்தவராகவும் இருப்பதற்காகவும் நன்றி. உம் சொந்த மக்கள் உம்மை புறக்கணித்த போதிலும் நீர் அவர்களை உம் சொந்தமாக ஏற்றுக்கொண்டு நேசித்ததற்காக நன்றி. எனக்காக சிலுவையை சகித்து மரணத்தை வென்றதற்காக நன்றி. உம்மிடமிருந்து வந்த பல விதைகளை நாங்கள் அனைவரும் காணும் போது, ​​தேவ தூதர்களோடு நீர் மகிமையுடன் திரும்பும் போது உம்மைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். உமக்கே எல்லா கனமும் , மகிமையும், வல்லமையும், அன்பும், புகழும் என்றென்றும் உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன், ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து