இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த ஆண்டு எல்லா நாளின் வசனங்களையும் போலவே, அந்த மாதம் மற்றும் தேதியுடன் வசனத்தை தேர்ந்தேடுக்கிறோம் , எனவே இயேசுவின் பிறப்பு தொடர்பான 12:25 குறிப்பைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஆனால் இயேசுவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவை இயேசுவுக்குள் தேவனானவர் நமக்குப் பொழிந்துள்ள அதிசயம், மகிழ்ச்சி மற்றும் மகிமை போன்ற அநேக காரியங்களை கொடுத்து நம்மை சந்தித்தார் என்று நான் நம்புகிறேன். இயேசுவை என்ன செய்ய வேண்டும் என்ற தேர்வை ஏரோது ராஜாவின் கையில் தேவன் கொடுத்தபோது , ​​​​தீய மற்றும் ஊழல் நிறைந்த ராஜா இயேசுவை வன்முறை நிராகரிப்பு, பொறாமை வெறுப்பு மற்றும் கொலை நோக்கத்துடன் சந்தித்தார். மரியாள் , யோசேப்பு , எலிசபெத், சகரியா, அன்னாள், சிமியோன், மேய்ப்பர்கள், தேவதூதர்கள் இயேசுவுக்குள் கிருபையை கொடுக்கும் தேவனின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். நம்மாலும் முடியும்! இயேசுவின் ஈவுடன் ஒரு மகத்தான வாய்ப்பும் பொறுப்பும் வருகிறது: நாம் கிறிஸ்துவைக் குறித்து கேட்கவும், கீழ்ப்படிந்து, பின்பற்றவும், கனம் பண்ணவும் தேர்ந்தெடுக்க வேண்டும் - குமரானகிய கிறிஸ்துவையும் மற்றும் நம் இரட்சகரும் ஆண்டவருமான கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும் ! இயேசுவுக்கு முந்தைய நாட்களில் இருந்த தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் , ராஜாக்கள் போன்ற தம்முடைய சிறிய தேவனுடைய மக்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் தம்முடைய ஜனங்களைக் கோரினார். ஜீவ ஒளி நம்மீது பிரகாசிக்கவும், நமக்கு இரட்சிப்பைக் கொண்டுவரவும் தேவன் தம் குமாரனின் மகிமையை நம்மில் ஒருவராக பூமிக்கு அனுப்ப வானத்தை வெறுமையாக்கினார். என்ன ஒரு அற்புதமான ஈவு !

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே, உமது குமாரனும் என் இரட்சகருமான இயேசுவை அனுப்பியதற்காக நன்றி. தயவு செய்து, அன்பே ஆண்டவரே, இயேசுவின் மாபெரிதான ஈவை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. தயவு செய்து, பரிசுத்த ஆவியானவரே, எனக்கு அதிகாரம் அளித்து, எனக்கு ஞானத்தைத் தந்தருளும், அதனால் நான் இயேசுவை உண்மையாக அறிந்து, கீழ்ப்படிந்து, என் வாழ்வில் கனம் பண்ண முடியும், நீர் என்னைப் மகிமையுடன் மேலும் மேலும் அவரைப் போல் மாற்றும். உம் குமரானகிய கிறிஸ்துவும் என் ஆண்டவருமான இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே உம்மை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து