இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாம் இயேசுவை காட்டிலும் ஊழியம் செய்யவோ, அன்பு செலுத்தவோ, கொடுக்கவோ முடியாது. அவர் நம்மை எப்பொழுதும் ஆசீர்வதிக்க விரும்புகிறார். வானத்தில் உள்ள ஐசுவரியத்தையும் கிருபையையும் நம்மீது பொழிய அவர் விரும்புகிறார். இன்னும் நம்பமுடியாத அளவிற்கு, தேவனின் குடும்பத்தில் அவருடைய நண்பர்களாகவும் இளைய சகோதர சகோதரிகளாகவும் நம்மை கனம் பண்ண அவர் விரும்புகிறார். நம் வாழ்வு முடிந்ததும், முழு பிரபஞ்சத்தின் ஆண்டவராகிய பிதாவாகிய தேவன் , இயேசுவின் நாமத்தில் தம்முடைய குமாரனுக்குச் ஊழியம் செய்தவர்களையும் இன்னுமாய் மற்றவர்களை இயேசுவின் நாமத்தினாலே ஆசீர்வதித்த அனைவரையும் கனப்படுத்துவார்! பிதா நம்மைத் அவரிடம் ஒருநாள் ஒன்றுகூட்டுவார் என்று இயேசு வாக்குக் கொடுத்தார், அப்பொழுது அவர் நம்மைக் கனம்பண்ணுவார்! நம்பமுடியவில்லையா? இல்லை! இது இயேசுவுக்குள் நமக்குக் கொடுக்கப்பட்ட தேவனின் நம்பமுடியாத கிருபையின் மற்றொரு எடுத்துக்காட்டு. மேலும் இயேசு நமக்கு வாக்குறுதி அளித்தார்: ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவும் பரிசுத்தமான தேவனே , இயேசுவின் சித்தத்தைப் பின்பற்றவும், அவருடைய போதனைகளுக்குக் கீழ்ப்படியவும், அவர் பூமியில் இருந்ததைப் போலவே மற்றவர்களுக்குச் ஊழியம் செய்யவும் எனக்கு உதவியருளும் . பிதாவே , உமது கிருபையைப் பெற தகுதியற்றவன் என்று எனக்குத் தெரியும், ஆனாலும் நான் இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறேன். அவருடைய நாமத்தினாலே மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய விரும்புகிறேன். இயேசுவுக்குள் உமது கிருபையைக் அவர்கள் பெற்றுக்கொள்ள உதவ விரும்புகிறேன். எனவே, உம்மை போற்றி, துதித்து நன்றி செலுத்தி அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.