இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நீங்கள் சரீரத்தின் எந்த அவயம் ? உங்கள் செயல்பாடு என்ன? தேவனுக்கான உங்கள் நோக்கம் என்ன? கிறிஸ்துவின் சரீரத்திலே நீங்கள் எப்படி மற்றவர்களை ஆசீர்வதிக்கிறீர்கள்? இயேசுவின் சரீரமாக மற்றவர்களுக்கு ஊழியஞ் செய்யும் ஒருவர் யார், ஆனால் உங்களுடைய ஊக்கமும் பாராட்டும் அவர்களுக்கு தேவையா? இயேசுவின் சரீரத்திலே புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் (அவயம்) தனிமையாகவும் உணரும் நபர்கள் யார், அவர்களுக்கு உங்கள் அன்பு காட்டப்பட வேண்டாமா ? நினைவில் கொள்ளுங்கள், மனித சரீரம் அதன் அவயம் மற்றும் உறுப்புகளை கவனித்துக்கொள்கிறது, ஏனெனில் அவை ஒவ்வொன்றும் சரியாக செயல்படுவது முக்கியம். இயேசுவின் சரீரத்திலும் அப்படித்தான். அதாவது உங்கள் சபைக்கு நீங்கள் அவசியம். இயேசுவின் சபை அவருடைய அன்பு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் நமது உடைந்த உலகில் ஆண்டவரின் சரீர பிரசன்னமாகச் செயல்படுவதற்கு நீங்கள் முக்கியமானவர் என்றும் அர்த்தம்!
என்னுடைய ஜெபம்
பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் சரீர பிரசன்னமாக, மிகவும் விலையுயர்ந்த, மிகவும் நம்பமுடியாத ஒன்றின் ஒரு பகுதியாக என்னை உருவாக்கியதற்காக நன்றி. எங்கள் சபையின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்கள் தனிப்பட்ட வரங்களை கண்டுபிடித்து, உம் கிருபையால் மற்றவர்களைத் தொடவும், இயேசுவின் சரீரமாகிய சபையை கட்டமைக்கவும், உமக்கு மகிமையைக் கொண்டுவரவும் உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.