இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பூமியிலே உருவாக்கப்பட்ட ஒவ்வொரு ராஜ்யமும் இறுதியில் கவிழ்ந்துவிடும், மேலும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கட்டமைப்பும் சிதைந்து விழும். இருப்பினும், தேவன், துருப்பிடிக்கவோ, கெட்டுப்போகவோ, மங்காத ஒரு ராஜ்யத்தை நமக்காக பரலோகத்தில் நமக்கு வைத்திருக்கிறார். இந்த மாபெரிய ஈவுக்கு நாம் என்ன செய்வோம்? பக்தியோடும் பயத்தோடும் துதிப்போம் ! பரிசுத்த ஆவியானவர் சபை கட்டிடத்தில் செய்யும் தொழுகையை குறித்து இங்கு பேசவில்லை. நம்முடைய அனுதின வாழ்வில் பயபக்தியோடும், பிரமிப்போடும் நாம் செய்யும் ஆராதனையை குறித்து இங்கு பேசுகிறார் . நாம் இப்படியாய் தொழுகிறோம் ... 1.சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. (எபிரெயர் 13:1). 2. அந்நியர்களை உபசரிப்பது (எபிரெயர் 13:2). 3.சிறையில் இருப்பவர்களையும் துன்புறுத்தப்பட்டவர்களையும் நினைவு கூர்தல் மற்றும் கவனித்துக்கொள்வது (எபிரேயர் 13:3). 4.விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். (எபிரெயர் 13:4). 5.நம்மிடம் இருப்பதில் திருப்தியடையக் கற்றுக்கொள்வதும், பண ஆசையிலிருந்து நம் வாழ்க்கையைக் காத்துக்கொள்வதும் (எபிரெயர் 13:5). 6.தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். (எபிரெயர் 13:7). 7.பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே. (எபிரேயர் 13:8). 8.எதிர்ப்பின் மத்தியிலும் இயேசுவைப் பின்பற்றி, அவருக்காக அவமானத்தைச் சுமக்க விரும்பினார் (எபிரெயர் 13:13). 9.ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். (எபிரெயர் 13:15). 10.நன்மை செய்வதை நினைவில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் (எபிரேயர் 13:16). உண்மையிலேயே நாம் பக்தியோடும் பயத்தோடும் செய்ய வேண்டிய தொழுகை இதுதானா? ஆம், ஏனென்றால் நம் அனுதின வாழ்வில் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். (எபிரெயர் 13:16).

என்னுடைய ஜெபம்

எல்லாப் துதியும் கனமும் உமக்கே உரியது ! உம்முடைய ஒப்பற்ற, அழியாத, வெல்ல முடியாத ராஜ்ஜியத்தில் எனக்கு இடம் கொடுத்ததற்காக நன்றி. இயேசுவின் நாமத்தினாலே , நான் உம்மை போற்றுகிறேன், வாழ்கிறேன், துதித்து, ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து