இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவன் நம்மை ஆசீர்வதிக்க மாத்திரம் செய்வதில்லை. அவர் நம்மை ஸ்திரப்படுத்தவும் செய்கிறார்! அவர் நம்மை பெலப்படுத்துகிறார். திடமான மற்றும் மெய்யான சீஷர்களாக நம்மை முதிர்ச்சியடைய செய்கிறார். இதை அவர் பல வழிகளில் செய்கிறார். அவற்றில்,மிக முக்கியமான ஒன்று, பரிசுத்த ஆவியானவர் மூலம் ஏவப்பட்ட மற்றும் இயேசுவின் சீஷர்களாகிய அப்போஸ்தளர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்ட வார்த்தைகளின் மூலம் நம்மை வழிநடத்துகிறது . இந்த வருஷம் முடியும் தருவாயில், இன்னொரு புதிய வருஷம் குறுகிய நாட்களில் நிற்கும் வேளையில், தினமும் வேதாகமத்தில் நேரத்தை செலவிடுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம். தேவனால் நமக்காக ஏவப்பட்ட இந்த (வேதாகமத்தை ) வல்லமை வாய்ந்த கருவி மற்றும் சிறந்த வளத்தை ஒரு தேநீர் அருந்தும் போது வாசிக்கும் புத்தகமாகவோ அல்லது சபைக்கு நம்முடன் எடுத்துச் செல்வதற்கான நல்ல அதிர்ஷ்ட வசீகரமான பொருளாகவோ நினைக்க கூடாது.
என்னுடைய ஜெபம்
தேவனே , உமது பரிசுத்த ஆவியானரின் மூலம் மனித எழுத்தாளர்களுக்குள் உமது வார்த்தையை ஏவி எங்களுக்கு வேதவாக்கியங்களை வழங்கியதற்காக உமக்கு நன்றி . அந்த வேதவசனங்களில் ஆவியின் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்ட அந்த மனிதர்களுக்காக நன்றி. இன்று நமக்குக் கிடைக்கும் வேதாகமத்தின் சிறந்த மொழிபெயர்ப்புகளுக்காக நன்றி. என் வீட்டில் வேதாகமத்தின் பிரதியை என் சொந்த மொழியில் வைத்திருக்கும் சுதந்திரத்திற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். உம் எழுதப்பட்ட வார்த்தையின் எண்ணி முடியாத ஆசீர்வாதத்தை வீணாக்காமல் இருக்க எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.