இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசுவானவர் அவர் வாழ்ந்த நாட்களில் பிரபலமான ஒரு உண்மையை மேற்கோள் காட்டுகிறார், இந்த "பெலமான மனிதன்" என்ற பழமொழியைப் பயன்படுத்தி சாத்தான் மீது தனது சொந்த வல்லமையை குறிப்பிடுகிறார். சாத்தான் நம் பாவத்தின் மூலம் நம்மை உரிமை கொண்டாடிய வலிமையான மனிதனாக இருக்கலாம், ஆனால் இயேசுவானவர் சாத்தானின் கோட்டையை உடைத்து நம்மை விடுதலையாக்கினார் . தீமை, மரணம் மற்றும் நரகத்தை விட இயேசுவானவர் மிகவும் வலிமையானவர். சிலுவையின் மூலம், நமது இரட்சகர் பெலமான மனிதனைக் கட்டி, பின்னர் அவனிடமிருந்து நம்மை மீட்டெடுத்தார் ! அவர் மனுஷ சாயலாக மாறி, தேவனுக்கு முழுக் கீழ்ப்படிதலுடன் மரணத்தை எதிர்கொள்வதன் மூலம் இதைச் செய்து முடித்தார் . கர்த்தர் மரித்தோரிலிருந்து எழுந்தார், பாவம், சாத்தான் , மரணம் மற்றும் நரகத்தை வெற்றி சிறந்து , நமக்குப் புது வாழ்வைக் கொடுத்தார்! தேவனை போற்றுவோம் ! இயேசு வலிமையானவரின் வீட்டிற்குள் நுழைந்தார். அவனை வென்று அவனைக் கட்டி நித்திய பாதாளத்தில் அடைத்தார் . வலிமையானவரின் வீட்டிலிருந்து அவர் என்ன கொண்டு வந்தார்? பொக்கிஷத்தை கொண்டுவந்தார் , நிச்சயமாக! அந்த பொக்கிஷமும் நாம்தான்!!
என்னுடைய ஜெபம்
கர்த்தராகிய இயேசுவே,எங்களை "இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். ஆமென். கொலோசெயர் 1:13