இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசு தமக்குச் சொந்தமானதிலே வந்தார் - அவர் சிருஷ்டித்த உலகம் மற்றும் அவர் தனது மக்களுக்கு வாக்குறுதியளித்த தேசம் - மற்றும் அவரது சொந்த ஜனங்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. சில சமயங்களில் நாம் இயேசுவிற்கான நமது ஆசைகள் மற்றும் கனவுகளால் கண்மூடித்தனமாக வாழ்கிறோம் , மேலும், அவர் நம்மிடத்தில் விரும்புவதை செய்ய தவறுகிறோம். நாம் நம் வாழ்வில் கடைபிடிக்கும் காரியங்களில் உண்மையாக இருப்பதில்லை . "இயேசு எனக்காக வந்தார், ஆனால் நானோ அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. நான் அவரிடம் என் இருதயத்தை முழுமையாகச் சரணடைவதற்கு முன்பு நான் செய்ய விரும்பிய மற்ற விஷயங்களையும், அனுபவிக்க விரும்பிய மற்ற விஷயங்களையும் நான் கொண்டிருந்தேன்."ஒவ்வொரு முறையும் நம் விருப்பத்தை இயேசுவிடம் ஒப்படைப்பதைத் தள்ளிப்போடுகிறோம், ஒவ்வொரு முறையும் அவரை ஆண்டவராகத் தள்ளும்போது, நம் இருதயங்களை கடினமாக்க அனுமதிக்கிறோம், மேலும் அவரைத் தவிர்ப்பது எளிதாகவும் மாறும். இப்போது, நம் இருதயங்கள் அவருடைய கிருபையை இன்னும் கவனத்துடன் வைத்திருக்கும் அதே வேளையில், அவருக்கான நமது அர்ப்பணிப்பைப் புதுப்பித்து, அவருடைய மகிமைக்காகவும் கிருபைக்காகவும் இருதயங்களையும் வாழ்க்கையையும் முழுமையாக அவருக்கு வழங்குவோம்.
என்னுடைய ஜெபம்
பரிசுத்த தேவனே, உமது சித்தத்திற்கு என் இருதயத்தை ஒப்புக்கொடுக்கிறேன். விலையேறப்பெற்ற இயேசுவே, இப்போது எல்லாவற்றிக்கும் மேலாய் என் வாழ்க்கையில் , நான் உம்மை என் ஆண்டவராக அங்கீகரிக்கிறேன், என் ஜீவனில் உமக்கு ஊழியம் செய்ய விரும்புகிறேன். உம்முடைய சமூகத்தை எதிர்த்த அல்லது உம் விருப்பங்களிலிருந்து விலகிய நேரங்களுக்காக தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நீர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, முற்றிலுமாய் உம்மை ஒப்புக் கொடுத்து என்னை இரட்சித்தீர் என்று அறிவேன். எனவே இப்போதும் , தயவுகூர்ந்து என்னை நீர் விரும்பும் வண்ணமாக உம்முடைய பிள்ளையாக வனைந்து , மற்றவர்களை ஆசீர்வதிக்க அடியேனை ஒரு வழியாகவும் , உமக்கு மகிமையும் கொண்டுவரும்படி எடுத்து பயன்படுத்துங்கள். ஆமென்.