இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எருசலேமில் உடைந்த தேவாலயத்தை மீண்டும் கட்டுவதற்கும், பரிசுத்த நகரத்தை மீண்டும் குடியமர்த்துவதற்கும், பரிசுத்ததிற்கு மீண்டும் அர்ப்பணிப்பதற்கும், உள்ளே இருக்கும் மக்களைப் பாதுகாக்க நகரத்தின் மதில் சுவர்களை மீண்டும் கட்டுவதற்கும் மக்களைத் திரட்டுவதற்கு அவருக்கு அதிகாரம் அளித்த ஒரு அந்நிய ராஜாவுக்கு சேவை செய்வதிலிருந்து நெகேமியா யூதேயாவுக்குத் திரும்பினார். மக்கள் சுவர்களை மீண்டும் கட்டி முடித்தவுடன், முக்கிய தலைவர்கள் மற்றும் அன்றாட இடங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று நெகேமியா வலியுறுத்தினார். சுவர்களுக்குள் தங்கள் இயல்பான அன்றாட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தது மற்றும் மக்களைத் சுத்திகரிக்கப்படும் பணியைத் தொடர்ந்தனர். நம்மைச் சுற்றியுள்ளவர்களை "சுத்தப்படுத்த" முயற்சிக்கும் முன், நாம் முதலில் தேவனுக்கு அர்ப்பணித்து, அவருடைய கிருபையால் பரிசுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று நெகேமியா நமக்கு நினைப்பூட்டுகிறார். அப்படியானால், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மீது தேவனுடைய பரிசுத்தத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தி வாழலாம். மற்றவரின் கண்ணில் உள்ள உத்திரத்தை சுத்தம் செய்வதற்கு முன், நம் கண்ணில் உள்ள துரும்பை அகற்றும்படி இயேசு சொன்னதைப் போன்றே இந்தக் கொள்கை உள்ளது (லூக்கா 6:41-42). சபை , வேலை, குழுக்கள், குடும்பங்கள் என எந்த மட்டத்திலும் உள்ள தலைவர்களுக்கு, மற்றவர்களை பரிசுத்தத்திற்கு அழைக்கும் முன் நம்மை பரிசுத்தத்திற்கு அர்ப்பணிப்பது மிகவும் அவசியம்! தேவனின் மிக முக்கியமான ஆவிக்குரிய புதுப்பித்தல் இயக்கம் முதலாவது தலைவர்கள் தங்களை தேவனுக்கு அர்ப்பணித்து, பின்னர் மற்றவர்களை தேவனின் பரிசுத்தமான வாழ்க்கை முறையை நோக்கி அழைத்துச் செல்வதில் இருந்து தொடங்குகிறார்கள்.

என்னுடைய ஜெபம்

பரலோகத்திலுள்ள பிதாவே, என் பாவங்களுக்காக என்னை மன்னியும். நான் கறையற்றவனாகவும் பரிசுத்தமாகவும் இருக்க விரும்புகிறேன், உமது ஆவியினால் சுத்திகரிக்கப்படவும், உமது கிருபையினால் மன்னிக்கப்படவும் விரும்புகிறேன். நான் செல்வாக்கு செலுத்த விரும்புவோருக்கு முன்பாக நான் பரிசுத்தமான வாழ்க்கை வாழ முற்படும்போது தயவுக்கூர்ந்து என்னை ஆசீர்வதியுங்கள். நான் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவதற்கும், என் நண்பர்கள் நான் இருக்க வேண்டும் என்பதற்கும் முன்மாதிரியாகவும், குணாதிசயமுள்ள நபராகவும் இருப்பதற்கு உம் வல்லமையுள்ள உதவி எனக்குத் தேவை. என் இரட்சகரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து