இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பழைய ஆண்டு விரைவில் கடந்து செல்கிறது...ஆனால் நாம் புதியவர்களாய், பரிசுத்தமாய், புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் ( 2 கொரிந்தியர் 4:17). இராஜ்ஜியத்தின் மக்கள் பரிசுத்தாவியின் வல்லமையினாலும், தேவனுடைய கிருபையினாலும் புதியவர்களாயும், புத்துணர்ச்சியுடன் மறுபடியும் பிறந்திருக்கிறார்கள் ( பார்க்க யோவான் 3:3-7, தீத்து 3:3-7, யோவான் 1:11).எனவே பழைய வருடத்தை நிறைவு செய்யும் போது, அதன் நன்மைகள் மற்றும் தீமைகள், சாதனைகள் மற்றும் தோல்விகள், வெற்றிகள் மற்றும் ஏமாற்றங்களுடன் நிறைவு செய்து , புத்தாண்டை ராஜ்ஜியத்திற்குரிய மக்களாக அணுகுவோமாக . தேவனின் இரக்கங்கள் ஒவ்வொரு காலைதோறும் புதியவை, நம்மில் வாழும் பரிசுத்த ஆவியானவரால் நம் வாழ்க்கையை தினமும் புதியதாக மாற்ற முடியும். ஆம், நாம் மீண்டும் பிறந்துள்ளோம். ஆனால் ஒவ்வொரு சூரிய உதயமும் நமக்குப் புதியவர்களாகவும், புதிய வழியில் வாழவும் வாய்ப்பளிக்கிறது, ஏனெனில் தேவனின் கிருபை நம் நம்பிக்கைகளை மீண்டும் தூண்டுகிறது மற்றும் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நம்பும்போது நம்மைப் புதியவர்களாக்குகிறார்.
என்னுடைய ஜெபம்
பரலோகத்தின் பிதாவே , நீர் பரிசுத்தமும்,நீதியுள்ளவருமாயிருக்கிறீர். உமது கிருபையும் , பரிசுத்த ஆவியின் அதிகாரமளிக்கும் பிரசன்னமும் இல்லாமல், நான் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் , எவ்வளவு பரிசுத்தமாகவும் நீதியுள்ளவனாகவும் இருக்க விரும்பினாலும் வெற்றியடைய முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். நீர் கொடுத்த மன்னிப்புக்காக நன்றி. தயவு செய்து என்னை புதிதாக்குங்கள். நான் ஒரு புதிய வருடத்தின் வாசலில் நிற்கும்போது, தயவு செய்து எனது பலவீனங்கள் மற்றும் பாவங்களை மேற்கொள்ள என்னை பெலப்படுத்துங்கள். என்னைச் சுற்றியுள்ள உலகில் உமது ஊழியங்களை காண என் கண்களைத் திறக்கவும், அவற்றை செய்யவும் என்னைப் எடுத்து பயன்படுத்துங்கள் .உமது ராஜ்ஜியத்திற்காகவும், என் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவுக்காகவும் முழுமையாக வாழ வேண்டும் என்ற என் ஆர்வத்தைத் தூண்டி உதவுங்கள் , இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்