இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு வாரத்திற்கும் மேலாக, கிறிஸ்துவ வுக்குள் உள்ள நம் சகோதர சகோதரிகளை நாம் நேசிக்க வேண்டும் என்பதை யோவான் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தினார். இருப்பினும், இன்றைய நினைவூட்டல் மிகவும் அவசியமானது . நாம் தேவனை அன்புக் கூறுவோமானால், அவருடைய பிள்ளைகளை, கிறிஸ்துவில் உள்ள நம் சகோதர சகோதரிகளை நாம் அன்புக்கூற வேண்டும். இந்த வார்த்தை " முடிந்தால் அன்புக் கூற வேண்டும்..." அல்லது "அன்புக் கூற முயற்சிக் வேண்டும் ..." அல்லது "அன்புக் கூறுவேன்..." அப்படி இல்லை என்பதை கவனியுங்கள். மேலே சொல்லப்பட்ட வார்த்தை "கட்டாயமாக அன்புக் கூற வேண்டும் !" தேவனின் கருத்து தெளிவாக உள்ளது: ஒருவரையொருவர் நேசிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமல்ல, பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்லது தாமதிக்க வேண்டிய ஒன்று அல்ல. தேவனுடைய பிள்ளைகளின் அனைவரின் பாவங்களுக்காகவும் இயேசுவை மரிக்க தேவன் அனுப்பினார். கிறிஸ்து யாருக்காக மரித்தார்களோ அவர்களை நாம் எப்படி நேசிக்காமல் இருக்க முடியும் (ரோமர் 14:15; 1 கொரிந்தியர் 8:11). கொரிந்தியர்களிடம் பவுலானவர் கூறுவது போல், " கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது." (2 கொரிந்தியர் 5:14). நாம் தேவனின் பிள்ளைகளை அன்புக்கூற வேண்டும்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , உம் பிள்ளைகளை நேசிப்பதை நான் சில நேரங்களில் தேர்ந்தெடுக்கும் பழக்கத்தை வைத்திருப்பதற்காக மன்னியுங்கள். உம் கிருபையால், என் சகோதர சகோதரிகள் என்னை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவர்கள் என்மீது அன்பு காட்டினாலும், எனக்கு தீங்கு செய்ய முற்பட்டாலும், கிறிஸ்துவுக்குள் அவர்களை ஆசீர்வதித்து, போஷித்து, பராமரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இன்னும் முழுமையாக, இன்னும் சீராக, இன்னும் அதிகமாக இயேசுவைப் போல அவர்களை நேசிக்க எனக்கு உதவுங்கள். பெரும் சோதனைகள் மற்றும் பாரம் கொண்ட உம் பிள்ளைகள் பலருக்காக நான் இன்று ஜெபம் செய்கிறேன்... (உங்களுக்குத் தெரிந்த சிலரை மற்றும் தேவனின் உதவி தேவைப்படுவோரை இங்கே பட்டியலிடவும்). நான் நேசிக்க கடினமாக இருக்கும் சிலரை நேசிக்க உம் பரிசுத்த ஆவியின் மூலம் எனக்கு அதிகாரம் தாரும். அன்பான வழிகளில் அவர்களுக்கு ஊழியம் செய்ய என்னைப் பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து