இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆச்சரியப்படும் விதமாக, முன்பு அசுத்த ஆவி பிடித்திருந்த அந்த மனிதனுக்கு இயேசு ஜீவனை திரும்பக் கொடுத்தார். சாத்தான், பிசாசுகள் மற்றும் கல்லறையின் வல்லமையினால் முன்பு கட்டுப்படிருந்து அவனை ஒருவராலும் விடுவிக்க முடியாத இந்த மனிதனை, கர்த்தர் ஆச்சரியமான முறையில் அவனை விடுவித்தார். புதிதாக விடுதலை பெற்ற இந்த மனிதன் ஆண்டவரின் கிருபையை எவ்வாறு பயன்படுத்துவான்? கர்த்தர் தனக்குச் செய்ததைத் தன் குடும்பத்திலும் இன்னுமாய் தன் நண்பர்கள், உறவுகளிடத்திலும் கூறுவான் . வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் , அந்த மனிதன் இயேசுவுக்குக் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்து கீழ்ப்படிந்தான், ஏனென்றால் கர்த்தர் மறுபடியுமாய் இந்த பகுதிக்கு வரும்போது இயேசுவின் வருகைக்காக அநேகர் காத்திருந்தார்கள்! கர்த்தர் நம்மில், நமக்காக, நம் மூலமாக என்ன செய்திருக்கிறார் என்பதை நாம் ஒவ்வொருவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா? நிச்சயமாகவே !

என்னுடைய ஜெபம்

பிதாவே , இதுவரை இயேசுவை ஆண்டவர் என்று அழைக்காத, இன்னும் அவருக்குத் தங்கள் வாழ்வை ஒப்படைக்காத என் குடும்பத்தில் உள்ளவர்களுடனும், என் நண்பர்களுடனும் என் நம்பிக்கையையும், உமது இரட்சிப்பையும் பகிர்ந்து கொள்ளும்படி எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் என்னை ஆசீர்வதியும். அவர்களை வெகுதூரம் புறக்கணிக்காமல் இருக்க எனக்கு உதவியருளும் , மாறாக, நீர் என்னுடைய வாழ்க்கையை ஆசீர்வதித்த அனைத்து வழிகளையும் அவர்கள் காணும்படி அவர்களுக்கு உதவிச் செய்யும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து