இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மைக் தண்டிக்கவேண்டுமென்று தேவன் நம்மை இரட்சிக்க வில்லை (யோவான் 3:17). இல்லை, அவர் நம்மை இரட்சித்ததினால் நாம் அவரோடு நித்திய வீட்டிலே வாழும்படியாகவும் , இன்னுமாய் அவருடைய கிருபையுள்ள பிரசன்னத்தை அனுபவிக்கவும் அப்படி செய்தார் . தேவனானவர் தம்முடைய சமூகத்தில் நாம் இருக்கும்படி விரும்புகிறார்; அதுதான் இரட்சிப்பு. நம் இருதயங்கள் அவருக்கு சொந்தமானதாக இருக்கும்போது, ​​​​அவருடைய சமூகத்திலிருந்து நம்மைத் தடுக்க அவர் யாதோன்றையும் அனுமதிக்கப் போவதில்லை. நாம் அனைவரும் "தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி" நம் பிதாவின் நித்திய வீட்டிற்குச் செல்கிறோம் - நாம் விழித்திருந்தாலும் (அதன் மூலம் நாம் ஜீவனோடு இருக்கிறோம் ) அல்லது நாம் இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களானாலும் ( நாம் கிறிஸ்துவுக்குள் மரித்தோம் என்று அர்த்தம்) - நாம் யாவரும் அவருடனே கூட எப்போதும் ஒன்றாக வாழப் போகிறோம் !

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே, இயேசுவின் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கைக்காக நன்றி! நான் இயேசு வரும்வரை வாழ்ந்தாலும் சரி, இன்றே நான் மரித்தாலும் சரி, என் எதிர்காலம் உம்மிடம் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏனென்றால் அது பாவம், மரணம் மற்றும் நரகத்தின் மீதான இயேசுவின் ஜெயத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. எனது மேலான எதிர்காலமாக உம்முடன் ஒரு நித்திய வீட்டைக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே உமக்கு நன்றியும் துதியும் ஸ்தோத்திரங்களையும் செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து