இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த விசுவாசத்தின் அழகான அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பரிசுத்த விவாகத்தில் சொல்லப்படுகிறது . நம்பமுடியாத வகையில், இது முந்தய காலத்தில் மணமகன் அல்லது மணமகளின் உறுதிமொழியாக இல்லை . மாறாக , ரூத்தின் மாமியாரிடம் ரூத்தின் உறுதிமொழியாக இது இருந்தது - ரூத்தின் கணவராகிய நகோமியின் மகன் மரித்து போனதால் , சிலர் அவளை முன்னாள் மாமியார் என்று அழைப்பார்கள். ஆயினும் , ரூத் நகோமியை எந்த வகையிலும், எந்த நேரத்திலும் "முன்னாள்" என்று எண்ணவில்லை . தேவனானவர் விசுவாசமுள்ளவர்களை நேசிக்கிறார், நாம் மற்றவர்களுக்கு உண்மையாக இருக்கும்போது அவருடைய ஆசீர்வாதத்தையும் தயவையும் அவர்கள் மீது பொழிகிறார் . காகிதத்தை போல , கந்தை துணியை போல , குளிர்பானக் கேன்கள் போல மக்கள் எளிதில் தூக்கி எறியப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் , விசுவாசம் என்பது தேவன் நேசிக்கும் ஒரு குணாதிசயம் மாத்திரமல்ல , அவர் இயேசுவின் மூலமாக நமக்காக மாதிரியாக காண்பித்துள்ள ஒரு குணாதிசயமும் கூட என்பதை நாம் நினைவில் கொள்வோம். எனவே, நமது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கு நாம் விசுவாசமாக இருப்பது ஒரு முக்கியமான மற்றும் தேவனுக்கு கனத்தை கொண்டுவரும் ஒரு அர்ப்பணிப்பாகப் பார்ப்போம். வரலாற்றை மாற்றவும் இயேசுவை நமக்கு கொண்டுவரவும் தேவனானவர் ரூத்தின் விசுவாசத்தைப் பயன்படுத்தினார்!
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள மற்றும் மெய்யான தேவனே, இஸ்ரவேலுக்கான உம் உடன்படிக்கைக்காகவும், வாக்குறுதிகளுக்காகவும், நீர் உண்மையுள்ளவராய் இருப்பதற்காகவும் நன்றி. உம் பிள்ளைகளில் மனம் மாறுபவர்கள் மற்றும் உண்மை தன்மை இல்லாதுபோதிலும் உம்முடைய மக்களை கைவிடாததற்காகவும், உம் வாக்குத்தத்தங்களை கைவிடாததற்காகவும் நன்றி. கொந்தளிப்பான மற்றும் துரோக உலகில் உம்முடைய உண்மையுள்ள பிள்ளையாக , விசுவாசம் நிறைந்த மற்றும் கணத்துக்குரிய மக்களாக நாங்கள் வாழ முற்படுகையில் எங்களை ஆசீர்வதித்தருளும் . எங்களிடம் காணப்படும் விசுவாசத்தின் ஒளி, உமது கிருபையிலும் உமது மக்களிடையேயும் ஸ்திரத்தன்மையையும் நம்பிக்கையையும் காண மற்றவர்களை அழைக்கட்டும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.