இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
ஞானஸ்நானத்தின் மூலமாக கிறிஸ்துவின் மரணத்திற்குள்ளாய் நாம் அவருடன் இணைக்கப்பட்டுள்ளோம் ( மேலே சொன்ன வசனத்தை தியானிப்பதற்கு ரோமர் 6:1-14 உள்ள முழு வசனப்பகுதியை ஒரு முன்னோட்டமாக பார்க்கலாம் ). நம்முடைய முந்தின பாவங்கள் கிறிஸ்துவுடனே கூட சிலுவையிலே அறையப்பட்டது. நாம் இனி பாவத்திற்கு அடிமையானவர்கள் அல்ல. தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கக்கூடிய பாவம், மரணம் மற்றும் அந்தகார சக்திகளிலிருந்து நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம் (கொலோசெயர் 2:12-15, 1:13-14). நாம் கிறிஸ்துவுக்குள்ளே ஜீவனுடனே இருக்கிறோம் - அவர் பாவம் மற்றும் மரணம் ஆகிய இவ்விரண்டும் ஜெயிக்கவோ ஆட்கொள்ளவோ முடியாதவர் . அவருடைய ஜீவியமே இப்போது நம் ஜீவனாய் இருக்கிறது . அவருடைய ஜெயம் இப்பொழுது நம் ஜெயமாய் . அவருடைய எதிர்காலம் நம்முடைய எதிர்காலமாய் இருக்கிறது (கொலோசெயர் 3:1-4). நமது கடந்தகால தோல்விகளுக்கும், பாவங்களுக்கும் நாம் மரித்து விட்டோம் என்பதை உணர்ந்து, இயேசுவுக்காய் வாழ்கிறோம் என்ற நிச்சியத்தை இருதயத்திலே வைத்து அதற்குக்கேற்ப நம் ஜீவியத்தை வாழ்வோம். எதிர்காலம் நமக்காக இருக்கிறது !
என்னுடைய ஜெபம்
கிருபையுள்ள பிதாவே , இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் என் கடந்தகால தோல்விகளை நீர் சிலுவையில் அறைந்தீர் என்பதை நான் எண்ணி முடியாத ஆசீர்வாதமாக உணர்கிறேன். சிலுவையில் அறையப்பட்ட உம் நேச குமாரனின் கல்லறையிலே எனது கடந்தகால பாவங்கள் அனைத்தையும் வைத்து அடக்கம் பண்ணினீர் . கிறிஸ்துவோடும் அவருடைய மகிமையான எதிர்காலத்தோடும் ஒப்புரவாக்கப்பட்ட ஒரு புதிய வாழ்க்கைக்கு அடியேனை அழைத்து உயர்த்தினீர். இயேசுவுக்குள்ளாய் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையையும் , மகிழ்ச்சியையும், வெற்றியையும் காண என்னை ஊக்ப்படுத்தியதற்காக நன்றி . உமது பரிசுத்த ஆவியினால் அடியேனை பெலப்படுத்தி, இன்னும் என்னை கர்த்தருக்கு முழுமையாய் ஒப்புக்கொடுக்க உதவிச் செய்தருளும் (2 கொரிந்தியர் 3:18). என் பாவங்கள் அனைத்தும் மரித்து,அடக்கம் பண்ணப்பட்டு, மறைந்துவிட்டன என்று முழுமையாக நம்பி வாழ எனக்கு அதிகாரத்தை தாரும் . எனது புதிய வாழ்க்கை இயேசுவுடனும் அவருடைய எதிர்காலத்துடனும் பிணைக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையை எனக்குக் தாரும் . இயேசுவே, இந்த நம்பிக்கைக்காக உமக்கு நன்றி, உமது நாமத்தின் மூலமாய் இந்த துதியையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறேன் . ஆமென்.