இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மார்த்தாளின் சகோதரன் மரித்தபோது இயேசு சொன்ன வார்த்தைகள் இவை. தன் சகோதரனின் மரணத்தில் இயேசு தலையிட்டு ஏதாவது செய்வார் என்று அவள் இன்னும் நம்பினாள். இங்கு இயேசுவானவர் சொன்ன வார்த்தை , பல நாட்களுக்கு முன்பு நாம் வலியுறுத்திய காரியத்துக்கு இவை நன்றாகப் பொருந்துகிறது. மாம்ச ரீதியாக மரிக்கும் ஒரு கிறிஸ்தவருக்கு , இயேசுவுக்குள் தேவனின் அன்பான பிரசன்னத்துடனான அந்த உறவிலிருந்து உண்மையில் ஒருபோதும் பிரிக்கப்படுவதில்லை (ரோமர் 8:32-39). அவர்களுடைய வாழ்க்கை இயேசுவோடு இணைந்திருக்கிறது, அந்த உறவு மரணத்தினால் துண்டிக்கப்படவில்லை (பிலிப்பியர் 1:18-23). இன்றைய வாசகத்தில், இதே போன்ற ஒரு உண்மையை நம்பும்படி இயேசுவானவர் சவால் விடுகிறார்: "உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்." உங்கள் தாயின் வயிற்றில் (சங்கீதம் 139:13-16) தேவன் உருவாக்கிய உங்களின் உண்மையான உயிருள்ள பகுதி ஒருபோதும் மரிக்காது என்று நம்புகிறீர்களா? உங்கள் மாம்ச சரீரம் மரித்தாலும் , நீங்கள் இன்னும் இயேசுவுக்குள் ஜீவனுள்ளவர்களாக இருக்கிறீர்களென்று நம்புகிறீர்களா? இது ஒரு நம்பமுடியாத சிந்தனை என்பதால் நான் நம்புகிறேன்! நாம் நித்தியமானவர்கள், அழியாதவர்கள், இயேசுவோடு இணைந்திருக்கிறோம். அவருடைய எதிர்காலம் அவரால் நம்மோடு இணைந்திருக்கிறது (கொலோசெயர் 3:1-4)! எனவே, இந்த வல்லமையுள்ள சத்தியத்தை நம்பி வாழ்வோமா?
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே,இயேசுவின் காரணமாக நான் ஒருபோதும் மரிக்க மாட்டேன் என்று நம்புகிறேன், என் வாழ்க்கையும் எதிர்காலமும் இயேசுவோடு இணைந்திருப்பதால் நான் உம்மை விட்டு எப்பொழுதும் பிரிந்ததிருப்பதில்லை . அன்பான பிதாவே , இந்த வாழ்க்கையில் நான் இருக்கும் போது ஒவ்வொரு நிமிடத்தையும் உமக்கு உபயோகிக்கும்படியாய் என்னை ஆசீர்வதியுங்கள். அதே சமயம், அன்பான தேவனே , உம்மை முகமுகமாக பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இதற்கிடையில், பயப்படாமல் நம்பிக்கையுடன் வாழ எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.